என்பதில் தொடக்கத்தில் ரஜினி,கமல் என இரு பெரும் ஆளுமைகள் தமிழ் சினிமாவை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. அப்பொழுதே தமிழ் சினிமாவில் நுழைந்து அவர்களுக்கு இணையான அந்தஸ்தை கொண்டிருந்தவர் விஜயகாந்த். தென் தமிழகத்தில் இருந்து வந்ததால் அந்தக் கருப்பு நிறமும் கட்டுமஸ்தான உடல் அமைப்பு கொண்ட தோற்றமும் தமிழகத்தின் கடைக்கோடி வரை இவரை சென்றடையச் செய்தது.
இதனால் இவரது பல படங்கள் ரஜினி மற்றும் கமல் படங்களில் இருக்கு படங்களுக்கு இணையாக இவரது படமும் சக்கை போடு போடும். அப்பொழுதே அவர்களுக்கு இணையான சம்பளத்தையும் பெற்று கொண்டிருந்தவர் விஜயகாந்த். தன் நடிப்பின் மூலம் தேசபக்தியை தமிழ் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர் இவர்.
இவரது படங்கள் தீவிரவாதத்தை ஒழிக்கும் வண்ணமாகவும் தேசபக்தியை ஊக்குவிக்கும் வண்ணமாகவும் காணப்படும். இவர் திரை வாழ்க்கையில் மட்டும் ஹீரோ அல்ல நிஜ வாழ்க்கையிலும் ஒரு ஹீரோவாக நின்று பலரது வாழ்க்கைக்கு ஒளியேற்றி உள்ளார்.
இவரால் வாழ்வடைந்தவர் பலர் என்றே சொல்லலாம். இவரை கருப்பு எம்ஜிஆர் என்றும் அழைப்பர். தேடிவந்தவருக்கும் உதவுவார் தேடிப்போயும் உதவிகளை வாரி வழங்கக்கூடிய வள்ளலாகவும் இருந்திருக்கிறார். அந்த வகையில் சினிமாவில் விஜயகாந்த் செய்த உதவி என் வாழ்நாளிலே மறக்க முடியாது என்று சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சரத்குமார் ஆரம்ப காலங்களில் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாகவும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துக் கொண்டிருந்தார். பின்னர் படிப்படியாக ஹீரோவாக தமிழ் சினிமாவில் ஜொலித்தார்.
நடிகர் மட்டுமின்றி ஒரு சில படங்களையும் தயாரித்தும் உள்ளார். அவர் தயாரித்த சில படங்கள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி கடனாளியாக என்னை மாற்றியது என்று கூறியுள்ளார். அப்பொழுது விஜயகாந்தின் உதவி என் வாழ்க்கையையே மாற்றி போட்டது. தொடர்ச்சியாக தோல்வி படங்களாலும் சொந்தப் படம் எடுத்து நஷ்டம் அடைந்து மனம் நொந்து போய் நின்ற போது தொடர்ச்சியாக எனக்கு பல படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கொடுத்ததை நான் எந்த காலத்திலும் மறக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
புலன் விசாரணையில் ஆரம்பித்து கேப்டன் பிரபாகரன்,சந்தன காற்று என்று அடுத்தடுத்து அவருடைய எட்டு படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதுமட்டுமின்றி புலன்விசாரணை படம் முடிந்தவுடன் இந்த படம் உனக்கு தான் நல்ல பெயர் கிடைக்கும் என்று விஜயகாந்த் சொன்னதை வேற எந்த ஹீரோவும் சொல்ல மாட்டார். இது என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு அன்று தொடர்ந்து இன்று வரை எனக்கு திரையுலகில் நெருக்கமான நண்பர் என்றால் அது விஜயகாந்த் மட்டும்தான் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் விஜயகாந்த் தற்போது இருக்கும் நிலைமை பார்த்து மிகவும் வருத்தமடைவதாகவும் கூடிய விரைவிலேயே அவர் பழைய நிலைமைக்கு திரும்பி வந்து என்னுடன் பேசுவார் என்று அந்த பேட்டியில் உணர்ச்சி பூர்வமாக கூறியிருந்தார்.