ஜெ மறைந்த பிறகு கடும் குழப்ப சூழ்நிலை தமிழக அரசியலில் ஏற்பட்டது. பன்னீர் செல்வம் அவர்களின் தியானம் கூவத்துர் பிரச்சினை, அதிமுகவினர் பிரிந்தது பின்பு அனைவரும் சேர்ந்தது என அனைத்துமே பின்னாளில் மாறியது.
ஒரு வழியாக அதிமுகவினர் அனைவரும் ஒரே வழியில் சென்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமையாளராக வைத்து அதிமுக ஆட்சியை நடத்தி வருகின்றனர்.
ஆட்சியே கலைந்து விடும் என எதிர்க்கட்சிகள் பேசி வந்த நிலையில் இந்த ஆட்சி சிறப்பாக செயல்படுவதாக சரத்குமார் கூறியுள்ளார். இரண்டு மாதத்தில் அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அவை அனைத்தையும் முதல்வர் பழனிசாமி பொய்யாக்கி ஆளுமை திறமையுடன் அதிமுகவை வழிநடத்தி இருக்கிறார்