கல்கி படத்துக்கு ‘ரகிட ரகிட’ டைப்ல போட்டு வச்ச சந்தோஷ் நாராயணன்!.. கழுவி ஊற்றும் பிரபாஸ் ஃபேன்ஸ்!..

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாபச்சன், கமலஹாசன், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்த கல்கி திரைப்படம் அடுத்த மாதம் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்கி இசையால்…

sana

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாபச்சன், கமலஹாசன், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்த கல்கி திரைப்படம் அடுத்த மாதம் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்கி இசையால் கடுப்பான பிரபாஸ் ரசிகர்கள்:

சந்தோஷ் நாராயணனின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று கல்கி படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் மினி டீசர் மட்டும் இன்று வெளியானது. விரைவில் ஆடியோ வெளியாகும் என்கிற அறிவிப்புடன் வெளியான அந்த இசையைக் கேட்ட ரசிகர்கள் சந்தோஷ் நாராயணன் தனது வேலையை காட்டி விட்டாரே என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் போட்டது போல ரகிட ரகிட பாடல் டைப்பில் எதிர்காலத்தில் நடக்கும் கதையை திரைக்கதையாக கொண்ட பிரபாஸின் கல்கி படத்துக்கு இப்படி ஒரு இசையை சந்தோஷ் நாராயணன் போடுவார் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை ரசிகர்கள் இப்போதே சிகப்புக் கொடியை தூக்க ஆரம்பித்து விட்டனர்.

பிரபாஸின் படங்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில் கடந்தாண்டு வெளியான சலார் திரைப்படம் சற்றே பில்டப் புகழின் காரணமாக தப்பித்துக் கொண்டது. ஆனால், இதுவரை வெளியான கல்கி திரைப்படங்களில் இருந்து எந்த ஒரு புரோமோஷன் யுக்தியும் படத்திற்கான ஹைப்பை கொடுக்காமல் படத்திற்கான மைனஸ் பாயிண்ட் ஆகவே மாறி வருகின்றன.

பான் இந்தியா படமாகவும் சர்வதேச ரசிகர்களை கவரும் படமாகவும் இந்த படம் இருக்கும் என ரசிகர்கள் ட்யூன் படத்துடன் கம்பேர் செய்து வரும் நிலையில், தர லோக்கல் குத்து பாடலாக சந்தோஷ் நாராயணன் போட்டு உள்ளாரா என்கிற கேள்விகளை ரசிகர்கள் தற்போது எழுப்பி வருகின்றனர்.

கல்கி திரைப்படம் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றால் பிரபாஸுக்கு மிகப்பெரிய இடியாக இறங்கும் என்றும் கூறுகின்றனர்.

நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் நிலையில் நிச்சயம் இயக்குனர் எந்த ஒரு சமூக மாற்ற என்கிற நம்பிக்கை கடைசிவரை பிரபாஸ் ரசிகர்களுக்கு உள்ளது. ஆனால், ஏதாவது மிஸ்டேக் நேர்ந்துவிட்டால் படத்தை மொத்தமாக காலி செய்ய பிரபாஸின் ஹேட்டர்கள் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.