நடிகர் சந்தானம் முதன் முதலில் சின்னத்திரையில் தான் டீ கடை பெஞ்சு, சகளை ஏள ரகளை, லொள்ளு சபா என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்பிறகு காதல் அழிவதில்லை, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், பிப்ரவரி 14, இங்கிலீஷ்காரன் என பல படங்களில் காமெடியனாக நடித்தார்.
சிம்புவின் நெருங்கிய நண்பராக இருந்ததால் அவரது பல படங்களில் நடித்தார். மன்மதன், வல்லவன், வீராசாமி, காளை, சிலம்பாட்டம் ஆகிய படங்களைச் சொல்லலாம். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் இவர் தான் ஹீரோ. இந்தப் படத்தில் இவர் தான் ஹீரோ. இந்தப் படத்தை ராமநாராயணனுடன் இணைந்து தயாரித்துள்ளார். இதன்பிறகு அவர் பல படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு, இனிமே இப்படித்தான், சக்க போடு போடு ராஜா, டகால்டி, பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி, ஏஜென்ட் கண்ணாயிரம், வடக்குப்பட்டி ராமசாமி, இங்க நான் தான் கிங்கு, ஓடி ஓடி உழைக்கணும், சர்வர் சுந்தரம், கிக், டிடி ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் இவர் தான் ஹீரோ. அடேங்கப்பா லிஸ்ட் போய்க்கிட்டே இருக்கே. இவ்ளோ படங்களில் அவர் ஹீரோவா நடிச்சிருக்காருன்னா அதுக்கு அவரோட திறமை தான் காரணம்.

நடிகர் சந்தானம் காமெடியனில் இருந்து ஹீரோவாக வந்தது எப்படி? அவருக்கு உண்மையிலேயே ஹீரோ ஆசை இருந்ததா? அல்லது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையா? அல்லது ஈகோ தான் காரணமா என வாசகர் ஒருவர் லென்ஸ் நிகழ்ச்சியில் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான். வாங்க பார்ப்போம்.
நானும் கதாநாயகனா என்ன என்று ஒருநாள் அவருக்குத் தோன்றிய எண்ணம் தான் சந்தானத்தை கதாநாயகனாக ஆக்கியிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பணத்துக்காக சந்தானம் கதாநாயகன் ஆனார் அப்படின்னு எல்லாம் சொல்ல முடியாது.
இப்போது கதாநாயகனாக நடிக்ககக்கூடியவர் என்ன சம்பாத்தியத்தோடு இருக்கிறாரோ அதைத் தான் காமெடி நடிகராக இருக்கும்போதே அடையக்கூடிய நிலையில் தான் சந்தானம் அந்தக் காலகட்டத்திலேயே இருந்தாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். நடிகர் சந்தானத்துக்கு டைமிங் காமெடியும், இயல்பான நக்கல், நய்யாண்டியும் தான் இவருக்கு என்று தனி அடையாளத்தைப் பெற்றுத் தந்தன.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


