ஆல்யாவிற்கு நடுரோட்டில் வைத்து சஞ்சீவ் கொடுத்த தண்டனை!!

நடிகர் சஞ்சீவ் சினிமாவில் மொத்தமாக 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு பெரிதாக சினிமாவில் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா-ராணி சீரியல் மூலம் சீரியலில் கால் பதித்தார்.…

நடிகர் சஞ்சீவ் சினிமாவில் மொத்தமாக 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு பெரிதாக சினிமாவில் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா-ராணி சீரியல் மூலம் சீரியலில் கால் பதித்தார்.

விஜய் தொலைக்காட்சியில் இவர் நடித்த ராஜா- ராணி சீரியல் 7 மணிக்கு ஒளிபரப்பானது. ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலுக்குப் போட்டியாக ஒளிபரப்பான இந்த சீரியல் மாஸ் ஹிட் ஆனதைத் தொடர்ந்து, இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த ஆல்யாவுடன் காதல் கொண்ட இவர், இந்த சீரியலை முடித்த கையோடு அவரைத் திருமணம் செய்து கொண்டார்.

aa5387669a91b2b29f5a2c94775abb03

அதன்பின்னர் கர்ப்பான நிலையிலும் ஆல்யா டான்ஸ் ஜோடி டான்ஸ் என்னும் நடன நிகழ்ச்சியின் நடுவராகக் கலந்து கொண்டார். அதேபோல் சஞ்சீவ் காற்றின் மொழி என்னும் புதிய சீரியலில் நடித்து வருகிறார். இவர்களுக்கு கடந்த மாதம் ஐலா சையத் என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது.

ஆல்யா – சஞ்சீவ் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிட்டுவரும் நிலையில், தற்போது சஞ்சீவ் ஆல்யாவிற்கு தண்டனை கொடுத்த பழைய வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

அதாவது ஆல்யா ஏதோ தவறு செய்ததையடுத்து, சஞ்சீவ் அவரை நடுரோட்டில் நிற்கவைத்து “சஞ்சீவ் ஐ லவ் யு” என்று சொல்லக்கூறி தண்டனை கொடுப்பாராம். அந்த தண்டனையை நடுரோட்டில் நின்றவாறு ஆல்யா செய்ய, அதனை சஞ்சீவ் வீடியோவாக எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன