வெளிவந்தது சாண்டியின் உண்மை முகம்!!

பிக் பாஸ் வீட்டில் உள்ளே நுழைந்ததிலிருந்து இதுவரை நடந்த மகிழ்ச்சியான தருணங்களை புகைப்படங்களாக எடுத்து நேற்று முன் தினத்தினைப் போலவே நேற்றும் பேசுமாறு கூறப்பட்டது. அதன்படி ஷெரின், ஃபாத்திமா பாபு, முகின், மோகன் வைத்யா,…

பிக் பாஸ் வீட்டில் உள்ளே நுழைந்ததிலிருந்து இதுவரை நடந்த மகிழ்ச்சியான தருணங்களை புகைப்படங்களாக எடுத்து நேற்று முன் தினத்தினைப் போலவே நேற்றும் பேசுமாறு கூறப்பட்டது.

அதன்படி ஷெரின், ஃபாத்திமா பாபு, முகின், மோகன் வைத்யா, சாண்டி, லோஸ்லியா என்று ஒவ்வொரு போட்டியாளர்களாக வந்து பேசினர்.

b1f3832c844c930c9602964de6674152

ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒரு ஒரு விஷயங்களாகப் பேசினாலும், சாண்டிதான் இந்த வீட்டில் இவ்வளவு சந்தோஷம் இருக்க காரணம் என்று திரும்பத் திரும்ப சொன்னார்கள்.

கடைசியாக பேசிய சாண்டி கதறி அழத் துவங்கினார். அதாவது, “நான் எங்கு சென்றாலும் அந்த இடத்தினை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள நினைப்பேன். நான் வீட்டில் அப்படி இருந்தது இல்லை.

வீட்டில் அனைவரும் ஒன்றாக இருந்தாலும்கூட நான் அங்கு இருக்கமாட்டேன். அனைவரும் நான் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறேன் என்று கூறும்போது எனக்கு குற்ற உணர்ச்சியாக உள்ளது.

வீட்டில் எனது மனைவி பேச வரும்போது மொக்கை போடாதே என்று சொல்லிவிட்டு போய்விடுவேன்” என்று கூறி கண்ணீர் வடித்தார்.

ஆனால் நிச்சயம் இவர் இந்த விஷயங்களை மாற்றிக் கொள்வார் என்று தெரிகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன