கடைசிநேரத்தில் சாண்டி பண்ண மோசமான விஷயம்!!

இன்றுடன் பிக் பாஸ் முடியவுள்ளநிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் நடந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் செய்தியாக வாசித்தார் லோஸ்லியா. முதல் வாரத்தில் வாசித்தபோது கையை ஆட்டி சீன் போட்டதை கமல் ஹாசன் சுட்டிக்…

இன்றுடன் பிக் பாஸ் முடியவுள்ளநிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் நடந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் செய்தியாக வாசித்தார் லோஸ்லியா. முதல் வாரத்தில் வாசித்தபோது கையை ஆட்டி சீன் போட்டதை கமல் ஹாசன் சுட்டிக் காட்டினார்.

அப்போது பிக் பாஸ் 3 டைட்டில் வின்னராக வெற்றி பெற்றவர்கள் எப்படி பேசுவார்கள் என சாண்டி செய்தார்.

821b47ac83257e486359ea2b29e8ea61

சேரன் வெற்றி பெற்றால், “ரொம்ப சந்தோஷமாக இருக்கு. நான் ஒரு கருத்து சிந்தனையாளர், அதனால் போறவங்க வர்றவங்களை கூப்பிட்டு கருத்து சொல்வேன். பிரச்சினை நடந்தபோது வெண்டைக்காய் நறுக்கிக் கொண்டு இருந்தேன் என தேவையில்லாமல் கலாய்த்தார் சாண்டி.

அடுத்து வனிதாவை, “நான் யாரிடமும் சண்டை இல்லை. கத்தி பேசியதும் இல்லை என்று கிண்டலடித்ததோடு, வத்திப் போடவே செய்தார் என பகிரங்கமாக கூறினார்.

மோகன் வைத்யாவை,. “சாத்துக்குடி ஊறுகாய் போடுவதை உங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன்” என்றும், கீழே புரண்டு நன்றி தெரிவிப்பதாகவும் கிண்டல் செய்தார்.

மீரா மிதுனைப் பற்றி பேசுகையில், அவர் தந்தையினை தேவையே இல்லாமல் இழுத்தார். உண்மையிலேயே பல தருணங்களில் மனம் காயப்படும் அளவு கிண்டல் செய்பவர் சாண்டி என்பதற்கு இதுவே உதாரணமாகும் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன