நாடோடிகள்’ பட நடிகரின் மறைவுக்கு சமுத்திரக்கனி இரங்கல்!

சசிகுமார் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நாடோடிகள் இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகமான நாடோடி 2’…


832fccaafc6ad91b922ebcd290556e03

சசிகுமார் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நாடோடிகள்

இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகமான நாடோடி 2’ என்ற திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது

இந்த நிலையில் நாடோடிகள் படத்தின் நாயகியான அனன்யாவின் தந்தையாக நடித்த கோபாலகிருஷ்ணன் என்ற நடிகர் என்று ஈரோட்டில் அவருடைய இல்லத்தில் காலமானார். அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் அவர் காலமானதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் நாடோடிகள் பட நடிகர் கோபாலகிருஷ்ணன் மறைவிற்கு இயக்குனர் சமுத்திரகனி தனது டுவிட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன