வீட்டை சுத்தம் செய்யும் சமீராவின் மகள் நைரா!! இதோ வீடியோ!!

சூர்யாவின் வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ்த் திரைப்படத்திற்கு வந்தவர் சமீரா ரெட்டி. முன்னணி நடிகைகள் பலரின் ஏக்கம் கௌதம் மேனன் படத்தில் நடிக்க வேண்டும் என்று இருக்கையில், எண்ட்ரிப் படத்திலேயே கௌதம் மேனன்…

சூர்யாவின் வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ்த் திரைப்படத்திற்கு வந்தவர் சமீரா ரெட்டி. முன்னணி நடிகைகள் பலரின் ஏக்கம் கௌதம் மேனன் படத்தில் நடிக்க வேண்டும் என்று இருக்கையில், எண்ட்ரிப் படத்திலேயே கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றதாலோ என்னவோ ஒரே படத்தில் மிகவும் பேமசாகிப் போனார்.

ஆனால் முதல் படத்தில் கிடைத்த வெற்றியினை இவரால் தொடர்ந்து தக்கவைக்க முடியவில்லை. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் நடித்த இவரின் படங்கள் தொடர்ந்து தோல்வியினையே சந்தித்தன.

2014-ம் ஆண்டு அக்ஷய் வர்தே என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டார்.  அவருக்கு நான்கு வயதில் ஹன்ஸ் என்ற மகன் உள்ளார். கடந்த ஆண்டு இவருக்கு இரண்டாவது குழந்தையாக நைரா என்ற பெண் குழந்தை பிறந்தது.

8ebf1f9a0879b065f05c22abe2621022-1

திருமணத்திற்குப் பின்னர் ரீ எண்ட்ரி கொடுப்பார் என நினைத்த ரசிகர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே ஆகும். அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தாலும், இரண்டு குழந்தைகளின் அம்மாவாக இருப்பதற்கே நேரம் போதுமான இருக்கிறது.

அவ்வப்போது அவரின் அழகான கியூட்டி செய்யும் சேட்டைகளை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் நைரா ஸ்டைலாக ரஜினிபோல் கூலிங் கிளாஸ் போடும் வீடியோ ஒன்றினை இன்ஸ்டாவில் பதிவிட்டு இருந்தார். தற்போது அவர் நைரா பாட்டிலில் உள்ள தண்ணீரை கீழே ஊற்றி, வீட்டை சுத்தம் செய்யும் வீடியோவை பதிவிட, ரசிகர்கள் “என்ன ஒரு அழகு?” என்று பாராட்டி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன