நடிகை சமந்தா தனது ரசிகர் ஒருவரை ’எவ்வளவு நேரம்தான் வீடியோ எடுப்ப, நடந்தா ஒழுங்கா நட, இந்த வீடியோ எடுக்குற வேலையெல்லாம் வச்சிக்கிடாதே’ என்று மிரட்டிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடிகை சமந்தா தனது பாதுகாவலர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது கோவிலுக்கு செல்ல படிகளில் ஏறி நடந்து கொண்டிருக்கும்போது ஒரு ரசிகர் தொடர்ச்சியாக அவரை பின்தொடர்ந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்
இதனை பார்த்ததும் கடுப்பான சமந்தா, ‘ஒழுங்கா நடந்து வா, இல்லாட்டி நடக்கறதே வேறு’ என்று மிரட்டியதோடு ‘நடந்தால் ஒழுங்கா நட, கூடவே வந்து வீடியோ இருக்கிற வேலையெல்லாம் வச்சுக்காத’ என்று ரசிகர்களை மிரட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது