நீங்கள் ஒரு போராளி: புற்றுநோயால் உயிருக்கு போராடும் நடிகைக்கு சமந்தா ஆறுதல்..

புற்றுநோயால் உயிருக்கு போராடி வரும் பிரபல நடிகைக்கு ’நீங்கள் ஒரு போராளி, கண்டிப்பாக நீங்கள் குணமாகி விடுவீர்கள்’ என்று நடிகை சமந்தா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன் மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்பதும் வேறு யாராவது இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் மனமுடைந்து மரணம் கூட அடைந்திருப்பார்கள் என்றும் ஆனால் சமந்தா மன வலிமை உடையவர் என்பதால் அவர் அந்த நோயுடன் போராடி தற்போது முழுமையாக குணமடைந்து உள்ளார் என்பதும் தெரிந்தது.

ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு அந்த நோயிலிருந்து போராடி குணமாகிய சமந்தாவுக்கு, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பது முழுமையாக தெரியும் என்பதால் தற்போது மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நடிகை ஹினாகானை நீங்கள் ஒரு போராளி, கண்டிப்பாக நீங்கள் குணமடைவீர்கள், உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்’ என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

samanthaa

36 வயதான பாலிவுட் நடிகை ஹினா கான் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென தனக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாக கூறி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தார். இருப்பினும் இந்த நோயை எதிர்த்து தான் போராடி வருவதாகவும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனக்கு தன்னுடைய குடும்பம் தைரியம் கொடுத்து வருகிறது என்றும், ரசிகர்களும் தனக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றும், உங்கள் அன்பு, பிரார்த்தனையால் நான் குணமடைந்து வருகிறேன் என்றும் ,அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் ஹினா கான் அவர்களுக்கு பல பாலிவுட் பிரபலங்கள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நடிகை சமந்தாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹினாகான் பதிவிட்ட வீடியோவை பதிவு செய்து’ உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன், நீங்கள் ஒரு போராளி’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுக்கு நன்றி கூறிய ஹினா கான் நீங்கள் மிகச் சிறந்த நட்சத்திரம் என்பதை அறிவேன்,  வாழ்க்கை உங்கள் மீது வீசிய அனைத்தையும் நீங்கள் எதிர்கொண்ட விதம் ஆச்சரியத்திற்கு அப்பாற்பட்டது, உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.