டிசம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளையும் பாதித்துள்ளது. இந்தியாவையும் விட்டுவைக்காத கொரோனா தற்போது தாண்டவமாடத் துவங்கியுள்ளது.
இதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கானது மார்ச் 24 ஆம் தேதி முதல் மே 17 வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் ஏழை, எளிய மக்களின் இயல்பு வாழ்க்கையானது பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமாப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் அவரவர் பங்கிற்கு உதவிகளைச் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் ரஜினி, கமல், சல்மான்கான், ஷாருக்கான், லாரன்ஸ், அஜித், விஜய், சூர்யா, அக்ஷய்குமார், தனுஷ், சிவ கார்த்திகேயன், விஜய் சேதுபதி, போன்றோர் மக்களுக்கு உதவி செய்ததோடு, அரசாங்கத்திற்கும் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
பாலிவுட் நடிகர்களான ஜாக்குலின் பெர்னாண்டஸ், லூலியா, கமல் கான் ஆகியோருடன் இணைந்து தற்போது பாலிவுட் நடிகர் சல்மான் கான் அருகில் உள்ள கிராம மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க முடிவு எடுத்து, உணவுப் பொருட்களை மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களில் கொண்டு சென்று வழங்கி உள்ளார். இந்த வீடியோ அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
