கொரோனா நோய்த் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கானது மார்ச் 24 ஆம் தேதி முதல் மே 17 வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் ஏழை, எளிய மக்களின் இயல்பு வாழ்க்கையானது பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமாப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் அவரவர் பங்கிற்கு உதவிகளைச் செய்து வருகின்றனர்.
அந்தவகையில் பாலிவுட் நடிகர்களான ஜாக்குலின் பெர்னாண்டஸ், லூலியா, கமல் கான் ஆகியோருடன் இணைந்து தற்போது பாலிவுட் நடிகர் சல்மான் கான் அருகில் உள்ள கிராம மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களில் கொண்டு சென்று வழங்கி வருகிறார்.
அந்தவகையில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுவரும் போலீசாருக்கு இந்தி நடிகர் சல்மான்கான் 1 லட்சம் கிருமிநாசினி பாட்டில்களை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து சல்மான்கான் தரப்பில் எந்தவொரு தகவலும் வெளியாக நிலையில், முதல் அமைச்சர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்துப் பதிவிடப்பட்டதோடு, நடிகர் சல்மான்கானுக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தவாரம் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடியவர்களுக்கு உதவும் பொருட்டு சல்மான் கான் 5000 ஏழை குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.