தமிழில் பல சிறந்த வில்லன் கதாபாத்திரங்கள் உள்ளது. அப்படிப்பட்ட கதாபாத்திரங்களின் பெயர்களை சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் முக்கியமான வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஒருவர் தான் நடிகர் சலீம் கௌஸ். தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே வில்லனாக நடித்த நடிகர் சலீம் கெளஸ், நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தது போல் ரசிகர்கள் மனதை கவர்ந்து விட்டது பெரும் ஆச்சரியம் தான்.
நடிகர் சலீம் புனேயில் உள்ள பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்துள்ளார். முதன் முதலில் இவர் இந்தி தொலைக்காட்சி சீரியலில் தான் அறிமுகமானார். அதன் பிறகு திரைப்பட வாய்ப்பை அவர் பெற்றார். ஹிந்தி படங்களில் ஒரு சில வேடங்களில் நடித்த நிலையில் அவருக்கு முதன்முதலாக ஒரு அட்டகாசமான வில்லன் வேடம் ’வெற்றி விழா’ திரைப்படத்தில் கிடைத்தது. பிரதாப் போத்தன் இயக்கத்தில் கமல்ஹாசன், பிரபு, அமலா, குஷ்பு நடித்த இந்த படத்தில் வியக்க வைக்கும் அளவுக்கு அவரது வில்லத்தனமான நடிப்பு இருந்தது. அந்த படத்தில் அவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். இப்படி ஒரு அட்டகாசமான வில்லன் தமிழ் சினிமாவிலா? என்று விமர்சனங்கள் எழுந்தன.

இதனை அடுத்து அவர் விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர், த்யராஜ் நடித்த மகுடம், மற்றும் பிரபு நடித்த செந்தமிழ் பாட்டு ஆகிய படங்களில் நடித்தார். அவர் நடித்த படங்களில் எல்லாம் அவரது கேரக்டர் அட்டகாசமாக இருந்தது. இதனை அடுத்து சலீம் கெளஸ்க்கு மிகப்பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது என்றால் பிரபு நடித்த தர்மசீலன் என்ற திரைப்படம் தான். இந்த படத்தில் அவர் பிரதீப் சக்கரவர்த்தி என்ற கேரக்டரை ஏற்று அந்த கேரக்டராகவே வாழ்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
இதனை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவான திருடா திருடா என்ற திரைப்படத்தில் விக்ரம் என்ற கேரக்டரில் அசத்தினார். நிச்சயமாக அந்த கேரக்டரை அவரை தவிர வேறு யாராலும் செய்திருக்க முடியாது. மேலும் அஜித் நடித்த ரெட் படத்திலும், விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு அட்டகாசமான வில்லனாகவும் பட்டையை கிளப்பி இருப்பார்.
தமிழ் சினிமாவில் 10 முதல் 12 படங்களில் மட்டுமே வில்லனாக நடித்த அசத்திய சலீம் கெளஸ் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ஹிந்தியில் உருவான ஐந்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றினார்

ஹாலிவுட்டின் சூப்பர் ஹிட் படமான ‘தி லயன் கிங்’ என்ற படத்தில் அவர் ஒரு முக்கிய கேரக்டருக்கு குரல் கொடுத்திருப்பார. அதேபோல் தமிழில் உருவான சுதந்திரம் என்ற படத்தில் அவர் குரல் கொடுத்திருந்தார். இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு சலீம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது திரையுலகினரை கடும் வேதனையில் ஆழ்த்தி இருந்தது. காலத்தால் மறைந்தாலும் அவரது வில்லத்தனமான நடிப்பு நிச்சயம் அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
