விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி, இந்த வாரத்துடன் முடியவுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்தப் பயணம் தற்போது 4 பேருடன் முடியவுள்ளது.
மாலை நேரம் இன்ப அதிர்ச்சி கொடுக்க, வனிதா, அபிராமி, சாக்ஷி, கஸ்தூரி, சேரன் ஆகியோர் என்ட்ரி கொடுத்தனர். போட்டியாளர்கள் ஓடிச் சென்று கட்டியணைத்து வரவேற்றனர்.
மதியவேளையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, திடீரென முளைத்த லாஸ்லியா-ஷெரின் உறவுகுறித்த கேள்வியை எழுப்பினார் நிருபர்.
அப்போது பேசிய லாஸ்லியா, “ஷெரினுக்கும், தனக்கும் இதுவரை ஒரு நட்பு இருந்ததில்லை அதற்குக் காரணம் நாங்கள் நெருங்க முனைவதற்குள் வேறு யாராவதால் ஏற்பட்ட பிரச்சினைகள் அந்த விஷயத்தை தடுத்துவிடும், இல்லையெனில் அவர்களுக்கு மற்றவர்களுடன் உள்ள நட்பு இதனைத் தடுத்துவிடும் என்று ஷாக்சியை மறைமுகமாக சாடினார்.
ஆனால் ஷாக்சியோ தன் காதலில் மூக்கினை நுழைத்த லோஸ்லியாவை மன்னித்ததோடு, அவருக்கு கிப்ட் வாங்கி கொடுத்து பாசத்தோடு கட்டியணைத்தார்.