ராம்சரண் தேஜா தயாரிப்பில் இன்று ரிலீஸ் ஆக இருக்கும் திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. சுதந்திர போராட்ட காலத்தில் வெள்ளையர்களை எதிர்த்து போரிட்ட ஒரு வீரர் தான் நரசிம்ம ரெட்டி அத்தகையதோரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் சிரஞ்சீவி.

இவர்களுடன் தமிழக நடிகர் விஜய் சேதுபதியும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் பிரபல கன்னட, தமிழ், தெலுகு நடிகர் சுதீப்பும் நடித்துள்ளார்.
நயன் தாரா, தமன்னா போன்றோரும் நடித்துள்ளனர்.
மிக பிரமாண்டமான பொருட்செலவுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படம் இன்று ரிலீஸ் ஆவதை சிரஞ்சீவி ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர். சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்
இப்படத்தை தமிழிலும் ஆர்.பி செளத்ரி வெளியிடுகிறார்.
