தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலக அளவில் பேமஸ் ஆன சாய் அப்யங்கர்… எதுக்குன்னு தெரிஞ்சா ஆச்சர்யபடுவீங்க…

By Meena

Published:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர் தான் சாய் அப்யங்கர். 20 வயதே ஆன இவர் அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இவர் சொந்தமாக இசையமைத்து பாடி கட்சி சேர என்ற ஆல்பம் பாடலை வெளியிட்டார்.

இந்த பாடல் youtube-பில் 140 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப் பிரபலமாக ஆனது. அந்த நேரத்தில் தான் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து பெயர் கொடியெல்லாம் அறிமுகப்படுத்தினார். அந்த நேரத்தில் இவர் கட்சி சேர என்ற இந்த வார்த்தை வைத்து வெளியிட்டதால் இந்தப் பாடல் ட்ரெண்டிங் ஆனது.

கடந்த ஜூன் மாதம் ஆச கூட என்று இரண்டாவது ஆல்பத்தை வெளியிட்டார். இந்த ஆல்பமும் youtube இல் 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கிறது. இதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற சாய் அபயங்கர் லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் திரைப்படத்தில் இசையமைக்கிறார்.

இது மட்டுமல்லாமல் சூரியன் 45 திரைப்படத்திலும் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். இந்நிலையில் google தேடலில் இந்த ஆண்டின் உலகின் மிகவும் தேடப்பட்ட டாப் 10 பாடல்கள் பட்டியலில் சாய் அப்யங்கரின் கட்சி சேர பாடல் பத்தாவது இடத்தை பெற்றிருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாடு மட்டுமல்ல உலக அளவில் ட்ரெண்டாக இருக்கிறார் சாய் அப்யங்கர்.