நானும் என் மகன் விஜயும் பேசிகொள்வது இல்லையா…? S A சந்திரசேகர் ஓபன் டாக்…

தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகராக இருந்து வருபவர் விஜய். இவரது தந்தை S A சந்திரசேகர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.…

sac

தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகராக இருந்து வருபவர் விஜய். இவரது தந்தை S A சந்திரசேகர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விஜய்.

தொடர்ந்து 1990களில் தனது 18 வது வயதில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் விஜய். ஆரம்பத்தில் குடும்பக் கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். 2000 காலகட்டத்திற்கு பிறகு சமூக நீதி கருத்துக்கள் கொண்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகராக ஆனார் விஜய். 2010 காலகட்டத்திற்கு பிறகு விஜய் நடித்து வெளிவந்தாலே அந்த படம் ஹிட்டுதான் என்ற அளவுக்கு புகழின் உச்சிக்கு சென்றார் விஜய்.

தற்போது தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருந்த போதும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய விஜய் அரசியலில் இறங்கபோவதாக கூறி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அதன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தான் இறுதியாக கமிட்டான ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறப்போவதாக கூறியிருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் விஜயின் தந்தை SA சந்திரசேகர் தற்போது பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படி இவர் நடித்த கூரன் பட ப்ரோமோஷன் நேர்காணலில் கலந்து கொள்ளும்போது விஜயுடன் தனக்கு பிரச்சினையா பேசுவதில்லையா என்பதை பற்றி பகிர்ந்து இருக்கிறார்.

S A சந்திரசேகர் கூறியது என்னவென்றால் நான் ஆரம்பத்தில் இருந்தே ஸ்ட்ரீட் தான். அதனால் விஜய் என்னிடம் அளவாகத்தான் பேசுவார். அப்போது எப்படி இருந்தோமோ அதே போல் தான் இப்போது வரையிலும் நாங்கள் இருக்கிறோம். நாங்கள் அளவாக தான் பேசுவோம். அதனால் எங்களுக்குள் பிரச்சனை நாங்கள் பேச மாட்டோம் அப்படி எதுவுமே இல்லை என்று ஓபனாக எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இல்லை என்பதை கூறி இருக்கிறார்.