Biggboss Tamil 9: ஆதிரை போலவே பிஆர் வேலை பார்க்கிறாரா சபரி.. ஒன்னுமே செய்யாதவர் எப்படி முதலிடத்தில்? ஆர்கானிக் வாக்குகள் வாங்கும் வாட்டர்மெலன் ஸ்டாரை முந்தியது எப்படி? பாருவை விட்டு தள்ளியே இருங்க திவாகர்.. கண்டிப்பாக முதல் 3 இடத்தில் வந்துவிடலாம்.!

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 வீட்டில், ஆரம்பத்தில் நெகட்டிவ் விமர்சனங்களுடன் நுழைந்த வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், மக்கள் ஆதரவால் முதல் இடத்தில் இருந்த நிலையில், தற்போது வி.ஜே. சபரி அவரை முந்தி ஓட்டிங்கில்…

sabari

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 வீட்டில், ஆரம்பத்தில் நெகட்டிவ் விமர்சனங்களுடன் நுழைந்த வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், மக்கள் ஆதரவால் முதல் இடத்தில் இருந்த நிலையில், தற்போது வி.ஜே. சபரி அவரை முந்தி ஓட்டிங்கில் முன்னிலை வகிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வி.ஜே. சபரி இதுவரை பிக் பாஸ் வீட்டில் பெரிய அளவில் எந்தச் சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. “ஒரு நிமிஷம் சார், சண்டை போடாதீங்க சார்” என்று சமாதானம் செய்வதை தாண்டி அவரது பங்களிப்பு குறைவாகவே உள்ளது. ஒரு வி.ஜே., மிமிக்ரி கலைஞர் என்ற இவரது வெளியுலக புகழுக்காக இந்த அதிக ஓட்டுக்கள் வருகிறதா, அல்லது ஆதிரைக்கு நடந்தது போல இவரும் ஒரு பி.ஆர். குழுவை அமைத்துவிட்டு சென்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த வாரம், ஆதிரை ஆரம்பத்தில் டாப் ஓட்டிங்கில் இருந்து, பின்னர் திவாகரால் முந்தப்பட்டார். ஆனால், இந்த வாரம் முதல் நாளே திவாகர் போன்ற பெரிய மக்கள் ஆதரவு கொண்ட ஒருவரை சபரி முந்தியது இயல்பானதல்ல என்று சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

பிக் பாஸ் வீட்டில் தற்போது உணவு பற்றாக்குறை மற்றும் பகிர்மான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. சபரி, ஒரு கம்யூனிச கருத்தியலை பின்பற்றுவது போல, “ஒரு கப்பில்” அளந்து அனைவருக்கும் சமமாக உணவைப் பங்கிட்டு வழங்குகிறார். சபரியின் இந்த அளவான உணவு பங்கீட்டிற்குத் திவாகர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். கானா வினோத்துக்கு ஒரு பவுல் சாப்பாடு பத்தாதபோதும், கூச்சத்தால் அவர் கூடுதலாக கேட்காமல் இருந்ததை திவாகர் சுட்டிக்காட்டினார்.

“உனக்கு ஒரு பவுல் போதுமா, பத்தாதா என்று கேட்டு, தேவை அதிகமுள்ளவர்களுக்கு அதிக உணவு கொடுக்க வேண்டும். எல்லாரையும் ஒரே மாதிரி அளக்கக் கூடாது,” என்று திவாகர் சபரியை அம்பலப்படுத்தினார். இந்த மோதலில் திவாகர் சரியான கருத்தை வெளிப்படுத்தினார் என்று பார்க்கப்படுகிறது.

மக்கள் ஆதரவு உண்மையிலேயே திவாகருக்கு சாதகமாக இருக்கும்போது, சபரி ஓட்டிங்கில் முன்னிலை பெறுவது பி.ஆர். குழுவின் சதி என்று விமர்சகர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். முந்தைய சீசன்களில் ஒரு நாளைக்கு ₹15,000 வரை செலவு செய்து பி.ஆர். குழுக்களை அமைத்து இருந்ததாக கூறப்படும் நிலையில் திவாகருக்கு கிடைப்பது ‘ஆர்கானிக்’ ஆதரவு என்றும், அவர் ஒரு நேர்காணலுக்குச் சென்றாலே பணம் வசூலித்து வருபவர் என்றும், எனவே அவர் பி.ஆர். குழுவை வைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.

திவாகர் தற்போது மக்கள் ஆதரவுடன் பாசிட்டிவ் இமேஜை பெற்றிருந்தாலும், அவர் வி.ஜே. பார்வதியை தொடர்ந்து ஆதரிப்பது அவருக்கு பாதகமாக அமையும் என்றும், அவரிடமிருந்து விலகி இருந்தாலே திவாகர் டாப்-3 இடத்தை உறுதி செய்ய முடியும் என்றும் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதேபோல் கொஞ்சம் தற்புகழ்ச்சியையும் திவாகர் குறைத்து கொள்ள வேண்டும், இல்லையெனில் அது மீம்ஸ் மெட்டீரியலாக மாறி அவருக்கே பாதகமாகிவிடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.