எண்பதுகளில் திரைக்கு வந்தவர் எஸ்.ஏ ராஜ்குமார். ஆரம்பித்த முதல் படமே மிகப்பெரும் ஹிட். சின்னப்பூவே மெல்லப்பேசுவில் தன் இசைப்பயணத்தை தொடங்கிய எஸ்.ஏ ராஜ்குமார் ஏ புள்ள கருப்பாயி என்ற பாடலை முதல் படத்திலேயே பாடி அதை ஹிட் ஆக்கினார்.
அது போல் இந்த படத்தில் இடம்பெற்ற சங்கீத வானில் என்ற பாடலும் மிக மென்மையான பாடல். இசை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாடல்.
தொடர்ந்து பறவைகள் பலவிதம், மனசுக்குள் மத்தாப்பூ என ராபர்ட் ராஜசேகர் என்ற இரட்டையர்கள் இயக்கிய படங்கள் இவருக்கு கை கொடுத்தன.
எல்லா பாடலுமே ஹிட் தான். இந்த நிலையில் இயக்குனர் விக்ரமனின் முதல் படமான புது வசந்தம் படத்தில் இவரது இசையமைப்பு இவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இளையராஜாவின் பாடல்கள் புகழ்பெற்ற அந்த காலக்கட்டத்தில் இவரின் பாடல்களான புது வசந்தம் படப்பாடல்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
சில நாட்களில் ராபர்ட் ராஜசேகர் இயக்குனர்கள் படம் இயக்குவதை நிறுத்தி கொண்டனர்.
அதன் பிறகு விக்ரமன் படங்களின் ஆஸ்தான இசையமைப்பாளரானார். ரசிகர்கள் இக்கூட்டணிக்கு மிகப்பெரும் வரவேற்பு அளித்தனர்.
சூர்யவம்சம், வானத்தைப் போல, ப்ரியமான தோழி என இவர்களின் இசைக்கூட்டணி நீண்ட நாட்கள் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று வரை எஸ்.ஏ ராஜ்குமாரின் பாடல்கள் கல்யாண வீடுகளிலும், கல்யாண வீடியோ கேசட்டுகளிலும் சேர்க்கும் அளவுக்கு தரமாகவும் நாகரீகமாகவும் இருப்பதே இவரது இசைக்கு கிடைத்த அங்கீகாரம்.