மொத்த பழியையும் விஜயா மீது தூக்கி போட்ட ரோகிணி.. முத்து-மீனாவை பழிவாங்க திட்டம்?

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியலில், இன்றைய எபிசோடில், “எதற்காக பொய் சொன்னாய்?” என்பதற்கான விளக்கத்தை கூறுமாறு பாட்டி கேட்க, ரோகிணி கொஞ்சம் கொஞ்சமாக  பொய் கலந்த உண்மையை சொல்லத்…

sa1

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியலில், இன்றைய எபிசோடில், “எதற்காக பொய் சொன்னாய்?” என்பதற்கான விளக்கத்தை கூறுமாறு பாட்டி கேட்க, ரோகிணி கொஞ்சம் கொஞ்சமாக  பொய் கலந்த உண்மையை சொல்லத் தொடங்குகிறார்.

“நான் மலேசியாவில் இருந்து வந்தது உண்மைதான். ஆனால், எனது அப்பாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. என் அம்மாவை அடிக்கடி அடிப்பார். ஒரு கட்டத்தில் அவருக்கும் எங்களுக்குமான உறவு முறிந்து போனது. இந்த வருத்தத்தில் என் அம்மாவும் இறந்து போயிட்டார். அதன் பின்னர், நான் சிறுவயதிலேயே சென்னைக்கு வந்துவிட்டேன். என் அப்பா எப்படி இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. அதன் பிறகு அவர் இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டேன்,” என்று கூறுகிறார்.

இந்த நிலையில் தான் மனோஜை சந்தித்ததாகவும், மனோஜை காதலித்து, அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும் கூறுகிறார். ஆனால், அதே நேரத்தில், ஆண்ட்டி பணக்கார பெண்ணை தான் தேடி வருகிறார் என்று தெரிந்ததால், மலேசியாவில் தான் ஒரு பணக்கார பெண் என்று பொய் சொன்னதாகவும், “நாம் மனோஜுடன் வாழ வேண்டும், இந்த குடும்பத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக தான் அந்த பொய்யை சொன்னேன்,” என்றும் அவர் கூறுகிறார்.

அப்போது விஜயா, “அப்போ உனக்கு சொத்து எதுவும் இல்லையா?” என்று கேட்க, “எந்த சொத்தும் என்னிடம் இல்லை,” என்று ரோகிணி கூறுகிறார்.

“ஒரு பொய்யை சொல்ல வேண்டுமானால், அதில் உண்மை கலந்து சொல்ல வேண்டும்” என்பதற்கேற்ப, சில பொய்களோடு சில உண்மைகளையும் கலந்து, ரோகிணி கூறியதை எல்லோரும் நம்பிவிட்டார்கள்

அதன் பிறகு, விஜயாவிடம், “நான் ஒன்றும் இல்லாமல் வந்தது உண்மைதான். ஆனால், நான்தான் மனோஜை ஒரு தொழிலதிபராக்கினேன். ஷோரூம் வைத்துக் கொடுத்தேன்,” என்று கூற, “அது எங்க அப்பா காசு!” என்று முத்து கூறுகிறார்.

“இருக்கலாம். ஆனால், மனோஜ் அதற்கு முன்பு எந்த வேலையும் செய்யாமல் இருந்தார். எல்லோரிடமும் அவமானப்பட்டு கொண்டிருந்தார். அவரை ஒரு ஆளாக்கியது நான்தான்,” என்று கூறி, “அது மட்டுமல்ல, மனோஜின் கடன்களையும் நான் தான் அடைத்தேன்,” என்று ரோகினி கூறுகிறார்.

அதற்கெல்லாம் உங்களுக்கு எப்படி பணம் வந்தது என்று ரவி கேட்க, “நான் என் பார்லரை விற்றுவிட்டேன்,” என்று கூற, அப்போது விஜயா மீண்டும் அதிர்ச்சி அடைகிறார்.

ஆனால், அண்ணாமலை அதிர்ச்சி அடையாமல், “இந்த விஷயம் எனக்கு ஏற்கனவே தெரியும். பார்லர் ரோகிணி உடையது இல்லை என்று முத்து  என்னிடம் சொன்னான், நானும் இதை உன்னிடம் சொன்னால், நீ ஆத்திரப்படுவாய் என்பதால் தான் நான் மறைத்தேன்,” என்று கூறுகிறார். “அப்போ, நீங்களும் என்னிடம் மறைத்துவிட்டீர்களா?” என்று மேலும் விஜயா ஆத்திரமடைகிறார்.

இதனை அடுத்து, பாட்டி, “இதெல்லாம் உன்னுடைய பேராசையால் தான் வந்தது,” என்று விஜயாவை திட்ட, “நீ வாழ விடமாட்டாய் என்பதற்காக தான் ரோகிணி பொய் மேல் பொய் சொல்லியிருக்கிறார்,” என்று கூறுகிறார்.

இதனை அடுத்து, அண்ணாமலை, “போனதெல்லாம் போகட்டும். இனிமேல் இந்த குடும்பத்திற்கு நீ நல்ல மருமகளாக, பொறுப்புள்ள மருமகளாக இருக்க வேண்டும். உன்னை பற்றிய ரகசியம் இன்னும் எதாவது இருக்கிறதா? இப்போது சொன்னதெல்லாம் உண்மையா?” என்று கேட்க,

“இப்போது சொன்னதெல்லாம் சத்தியமாக உண்மை! இனிமேல் நான் இந்த குடும்பத்திற்கு உண்மையாக இருப்பேன்,” என்று ரோகிணி கூறுகிறார்.

இதனை அடுத்து, “நீயும் அப்போ ஒன்றும் இல்லாதவள்தானா? ஏற்கனவே இங்கே ஒருத்தி இருக்கிறாள், நீயும் அதே மாதிரி தானா என்று விஜயா விரத்தியுடன் கூறுகிறார்.

இதனை அடுத்து, பாட்டி, ரோகிணிக்கும் அறிவுரை கூறி, “இனிமேலாவது இந்த வீட்டில் உண்மையாக இருக்க வேண்டும்,” என்று கூறுவதை தொடர்ந்து, இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

நாளைய எபிசோடில்: ரோகிணி, “இனிமேல் இந்த வீட்டிற்கு நான் உண்மையாக இருப்பேன், பொறுப்புடன் இருப்பேன்,” என்று கூறி சத்தியம் செய்கிறாள். அதன் பின்னர், முத்து மீனாவை பார்த்து பயங்கரமாக முறைக்கிறார். அதை பார்க்கும்போது, “முத்துவையும் மீனாவையும் பழிவாங்க வேண்டும்,” என்று அவர் மனதில் திட்டம் போடுகிறார் என தெரிகிறது. இது எப்படி நடக்கும் என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்ப்போம்!