பாடகராக மாறிய இன்னொரு பிரபல நடிகர் யார் தெரியுமா?

தற்போது பல பிரபல நடிகர்கள் பாடல்களை பாடி வருகின்றனர் என்பது தெரிந்ததே. சமீபத்தில் ’மாறாதீம்’ என்ற பாடலை சூர்யாவும், நடிகர் சதீஷ் ஒரு பாடலையும் பாடினார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிரபல காமெடி…


bbb8e704b166e6a7a3d6767b35d0d091

தற்போது பல பிரபல நடிகர்கள் பாடல்களை பாடி வருகின்றனர் என்பது தெரிந்ததே. சமீபத்தில் ’மாறாதீம்’ என்ற பாடலை சூர்யாவும், நடிகர் சதீஷ் ஒரு பாடலையும் பாடினார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரும் ’கன்னிமாடம்’ என்ற படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்

இசையமைப்பாளர் ஹரிசாய் என்பவர் கம்போஸ் செய்த இந்த பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ’கன்னிமாடம்’ படத்தை பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ளார். இவர் இயக்கிய முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜின் தந்தை கஜராஜ் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன