கமலையும் பிக் பாஸையும் கழுவி ஊற்றிய எக்ஸ் போட்டியாளர்!.. என்ன நிலைமை இப்படி மோசமாகிடுச்சே!..

By Sarath

Published:

நடன இயக்குநர் மற்றும் நடிகரான ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துக்கொண்டார். மேலும் அதே சீசனில் சரவணன் மினாட்சி சீரியல் மூலம் பிரபலமான ரச்சிதாவும் பங்கேற்றார். அதில் ராபர்ட் மாஸ்டர் ரச்சித்தாவுடன் பழகிய விதம் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது அவர் அளித்திருந்த பேட்டி ஒன்றில் கமல்ஹாசனை பற்றி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராபர்ட் மாஸ்டர் மம்மூட்டி நடிப்பில் வெளியான அழகன் படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தன் வாழ்க்கையை தொடங்கினார். அதை தொடர்ந்து வில்லன் காதாப்பாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார். மாறன், பவளக்கொடி, டான்சர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் நடன இயக்குநராக காதல் தேசம், வந்தா ராஜாவாதான் வருவேன், போடா போடி, ஓஸ்தி உள்ளிட்ட பல படங்களின் பாடல்களுக்கு பணியாற்றியுள்ளார்.

அதையடுத்து சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்த ராபட் மாஸ்டர் தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் விதம் விமர்சனங்களை உண்டாக்கியது. எனவே பெரும்பாலான பட வாய்ப்பை இழந்த ராபர்ட் பலருக்கும் ஒரு நல்ல ப்ளாட்ஃபார்மை அமைத்து தரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அதிலும் அவர் கவனம் ரச்சித்தா பக்கம் திரும்பியதால் 49 நாட்களில் வெளியேறினார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாக உள்ளது. அதை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் தக் லஃப் படத்தில் நடிக்க உள்ளார். மேலும் சிவகார்த்திகேயனின் அமரன், சிலம்பரசனின் எஸ்டிஆர் 48 உள்ளிட்ட படங்களை தயாரித்தும் வருகிறார். மக்கள் நீதி மையம் என்ற பெயரில் கட்சியை துவங்கியிருந்த கமல் சட்ட பேரவை தேர்தலில் தோல்வியுற்றார். தற்போது திமுகாவுடன் இணைந்து அடுத்த தேர்தல் பணியிலும் ஈடுப்பட்டு வருகிறார். இப்படி அனைத்திலும் பிஸியாக இருந்து வரும் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், ராபர்ட் மாஸ்டர் அளித்திருந்த பேட்டி ஒன்றில் , பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் சம்பாதிக்க தான் போனேன், எனக்கேன்று ஒரு பெயர் உண்டு. கமல்ஹாசனுக்கு அந்த நிகழ்ச்சிக்கு எவ்வளவு சம்பளம் என்று அனைவருக்கும் தெரியும் அவ்வளவு பெயரும் புகழும் இருந்தாலும் அவரும் சம்பாதிக்க தான் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதே வீண் தான் அதில் நடக்கும் அனைத்தையும் ஒளிப்பரப்பு செய்வதில்லை பலவற்றை எடிட் செய்துவிடுகின்றனர் என தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.

பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்ச்சித்து வரும் நிலையில் அதில் கலந்துக்கொண்ட ஹரிஷ் கல்யாண், ஆரவ், கவின் உள்ளிட்ட சிலர் திரைதுறையில் சாதித்து வருகின்றனர். எனவே அந்நிகழ்ச்சி ஒருவருக்கு கொடுக்கும் வாய்ப்பினை அவரவர் எப்படி பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பதில் தான் உள்ளது அவர்களது திறமை என ராபர்ட் மாஸ்டர் பேச்சை கேலி செய்து வருகின்றனர்.