அப்ப புரியல, பெரிய தப்பு செஞ்சுட்டேன்.. சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட ஆர் ஜே பாலாஜி..

By Ajith V

Published:

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்கள் பட்டியலில் மிக மிக வேகமாக இடம் பிடித்த ஒருவர் தான் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டிருந்த அவர், அதே தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ஷோக்களையும் தொகுத்து வழங்கி இருந்தார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது அதில் வேடிக்கையான விஷயங்களை அடுத்தடுத்து சொல்லிக் கொண்டே பேசி நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்தினால் அது மக்கள் மத்தியில் மிக எளிதில் கவனம் பெறும்.

அந்த வகையில் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருக்கும் போதே ரசிகர்கள் மனதை கவர்ந்திருந்த சிவகார்த்திகேயன், மெரினா திரைப்படத்தின் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். தொடர்ச்சியாக காமெடி கலந்த கதாபாத்திரங்களில் நாயகனாக நடித்து வந்த சிவகார்த்திகேயன் ஒரு கட்டத்திற்கு பின்னர் சீரியஸான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கத் தொடங்கியிருந்தார்.

300 கோடி தொட்ட அமரன்

இதில் நடுவில் சில திரைப்படங்கள் பெரிய அளவில் தோல்வி அடைந்தாலும் அமரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம், மேஜர் முகுந்தின் நிஜ வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டோரின் நடிப்பு, ஜிவி பிரகாஷின் இசை, ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் என அனைத்து அம்சங்களும் சிறப்பாக அமைய அமரன் திரைப்படம் சுமார் 300 கோடியையும் சமீபத்தில் தொட்டு பல முன்னணி நடிகர்களுக்கு சவாலை கொடுத்திருந்தது.
SK in Amaran

அப்படி ஒரு சூழலில் சிவகார்த்திகேயனிடம் ஆர் ஜே பாலாஜி ஒருமுறை மன்னிப்பு கேட்டது பற்றிய தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது. காமெடி கதாபாத்திரங்களில் ஹீரோவாக அதிகம் நடித்து வந்த ஆர் ஜே பாலாஜி, ‘சொர்க்கவாசல்’ என்ற திரைப்படத்தில் மிகவும் மாறுபட்ட ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட ஆர் ஜே பாலாஜி

சொர்க்கவாசல் திரைப்படம் நவம்பர் மாதம் 29 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இது தொடர்பான நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பேசிய ஆர் ஜே பாலாஜி, “ஒரு தொலைக்காட்சியில் நான் விருது வாங்கும் போது அனைத்து பிரபலங்களும் எப்படி பேசுவார்கள் என்பதை கலாய்த்து ஒரு நிகழ்ச்சி செய்திருந்தேன். அப்போது சிவகார்த்திகேயன் ஒரு விருது நிகழ்ச்சி மேடையில் கண்ணீர் விட்டது தொடர்பாக நான் அதனை கலாய்த்து அந்த நிகழ்ச்சியில் நடித்திருந்தேன்.
RJ Balaji Sorgavaasal

அந்த நிகழ்ச்சியின் போது எனக்கு அது தப்பாக தெரியவில்லை. ஆனால், சிவகார்த்திகேயன் பேசிய வீடியோவை பார்த்ததும் உடனடியாக அவருக்கு அழைத்து மன்னிப்பு கேட்டேன். ஏனென்றால் நான் செய்தது எனக்கு தப்பாக தோன்றியது” என குறிப்பிட்டுள்ளார் ஆர் ஜே பாலாஜி.