அஜித்தால் படம் ஓடாதா…? உண்மை எல்லாருக்கும் தெரியும்… பிரேம்ஜி அதிரடி…

பிரேம்ஜி கங்கை அமரன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவரது சகோதரர் வெங்கட் பிரபு பிரபலமான இயக்குனராக இருக்கிறார் மற்றும் இவரது தந்தை கங்கை அமரன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய…

remji

பிரேம்ஜி கங்கை அமரன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவரது சகோதரர் வெங்கட் பிரபு பிரபலமான இயக்குனராக இருக்கிறார் மற்றும் இவரது தந்தை கங்கை அமரன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர். மேலும் இவரது பெரியப்பா தான் இசைஞானி இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் தனது சகோதரர் வெங்கட் பிரபு யுவன் சங்கர் ராஜா உடன் இணைந்து ஒரு இசை பேண்ட் குழுவை அமைத்து பணியாற்றினார். 2006 ஆம் ஆண்டு சிம்பு நடித்த வல்லவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சென்னை 600028 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் பிரேம்ஜி.

தொடர்ந்து மங்காத்தா, சேட்டை, கோவா, சென்னை 600028 -2 போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் பிரேம்ஜி. இவரது சகோதரர் வெங்கட் பிரபு இயக்கும் அனைத்து படங்களிலும் கண்டிப்பாக பிரேம்ஜி இருப்பார்.

தற்போது Good Bad Ugly திரைப்படத்தில் தனது பாடல்களை அனுமதி இன்றி பயன்படுத்தியதற்காக இளையராஜா நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில் பிரேம்ஜி அவர்களின் தந்தையும் இளையராஜா அவர்களின் சகோதரரும் ஆன கங்கை அமரன் எனது அண்ணன் செய்வது தவறில்லை என்பது போல காட்டமாக பேசியிருப்பார். அது குறித்து பத்திரிக்கையாளர்கள் பிரேம்ஜியிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் சொன்ன பிரேம்ஜி எனது அப்பா அவருடைய அண்ணனான இளையராஜாவுக்கு சப்போர்ட் செய்து பேசியிருக்கிறார். அதில் தவறில்லை. ஆனால் அஜித்தால் படம் ஓடாது என்று கூற முடியாது. உண்மை எல்லோருக்கும் தெரியும் என்று பதில் அளித்து இருக்கிறார் பிரேம்ஜி.