ரோட்டுக் கடையில் சாப்பிட்ட நீடா அம்பானி.. வைரலாகும் புகைப்படம்

பிரபலங்கள் என்ன செய்தாலும் அது வைரல் தான். நின்றால், நடந்தால், சாப்பிட்டால், படித்தால், வண்டி ஓட்டினால் என இப்படி என்ன வேலையையும் பொது வெளியில் செய்யும் போது அவர்களைப் பார்க்க மக்கள் கூட்டம் முண்டியடிக்கிறது. சினிமா நடிகர்களுக்குக் கூடும் கூட்டம் ஒருபுறம் இருந்தாலும் உலகின் மிகபெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி செய்த செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்படி ஒன்றும் அவர் புதிதாகச் செய்யவில்லை. சாதாரண ரோட்டுக் கடையில் சென்று உணவருந்தி சுவையைப் பாராட்டியிருக்கிறார்.

ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவரான முகேஷ் அம்பானி – நீடா அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானியின் திருணம் அடுத்த மாதம் 12-ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ அரங்கில் நடைபெறுகிறது. தன்னுடைய சிறுவயது தோழி ராதிகா மெர்சண்டை மனைவியாகக் கரம் பிடிக்கிறார் ஆனந்த் அம்பானி.

இதனையொட்டி அழைப்பிதழ்கள் கொடுக்கும் பணியில் இருவீட்டார் குடும்பமும் மும்முரமாக ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். திருமணத்திற்கான முன் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள், இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் போன்ற உலகப் பணக்காரர்களும் கலந்து கொண்டனர்.

தேவர் மகன் கதையை கமல் எழுதியது இப்படித்தான்.. இந்தியன் 2 புரோமோஷன் நிகழ்ச்சியில் ரகசியத்தினை போட்டுடைத்த கமல்

இந்நிலையில் திருமணம் சிறப்பாக நடைபெற வேண்டி காசி விஸ்வநாதர் கோவிலில் நீடா அம்பானி மனமுருகி வேண்டினார். அதன்பின் அங்குள்ள சிற்றுண்டியில் உணவு அருந்தினார். உலகின் மிகப்பெரிய தொழிலதிபரின் மனைவி காசியில் உள்ள ஒரு சாதாரண உணவகத்தில் சென்று சிற்றுண்டி அருந்தியது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. உணவின் தரம், சுவை குறித்து ஹோட்டல் நிர்வாகிகளிடம் சிறிது நேரம் கலந்துரையாடிவிட்டு பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் நீடா அம்பானி.

நீடா அம்பானி சிற்றுண்டி அருந்திய புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.