தேவர் மகன் கதையை கமல் எழுதியது இப்படித்தான்.. இந்தியன் 2 புரோமோஷன் நிகழ்ச்சியில் ரகசியத்தினை போட்டுடைத்த கமல்

கமல்ஹாசன் திரை வாழ்க்கையில் எத்தனையோ முக்கியமான திரைப்படங்கள் வந்திருந்தாலும் அவருக்கு என்றும் பெயர் சொல்லும் விதமாக அமைந்த படங்கள் இரண்டு. ஒன்று நாயகன். மற்றொன்று தேவர் மகன். நாயகன் முழுக்க முழுக்க மணிரத்னத்தின் சாயலில் எடுக்கப்பட்டது.

ஆனால் தேவர் மகன் அப்படியல்ல கதை, திரைக்கதை, வசனம் ஆகிய பொறுப்புகளை கமல் ஏற்றுக் கொள்ள இயக்குநர் பரதன் மற்றும் இளையராஜா, பி.சி. ஸ்ரீராம் ஆகியோர் படத்திற்கு உயிர் கொடுத்தனர். 1992-ல் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எஜமான் படத்துடன் வெளியான தேவர்மகன் மாபெரும் வெற்றி பெற்றதோடு பல்வேறு சாதனைகளுக்கும் சொந்தமானது.

முதன் முதலில் சாஃப்ட்வேர் மூலம் திரைக்கதை எழுதப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் இதுவேயாகும். தமிழில் சிறந்த திரைப்படம், சிறந்த துணை நடிகை (ரேவதி), சிறந்த பின்னணிப் பாடகி (ஜானகி), சிறந்த நடுவர் விருது (சிவாஜி கணேசன்), சிறந்த ஒலிப்பதிவு ஆகிய பிரிவுகளில் 5 தேசிய விருதுகளைப் பெற்றது.

இதில் சிவாஜி கணேசன் மட்டும் தனது விருதினை நிராகரித்தார். பெரிய தேவர் கதாபாத்திரத்திற்கு முதலில் ராஜேஷ், விஜயக்குமாரை நடிக்க வைக்க அணுகியிருக்கிறார் கமல். ஆனால் அதன்பின் சிவாஜியுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆவலில் அவரைச் சம்மதிக்க வைத்தார். ஆஸ்கர் விருதுக்கும் இப்படம் அனுப்பப்பட்டது.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை.. ஆந்திர முதல்வர் சந்திரபாபுவின் முடிவை கைவிடக் கோரி ஈபிஎஸ் வலியுறுத்தல்

இப்படி பல சாதனைகளுக்குச் சொந்தமாக விளங்கும் தேவர் மகன் திரைப்படத்தின் கதையை கமல்ஹாசன் மிகக் குறுகிய நாட்களிலேயே எழுதி முடித்துவிட்டார். அவ்வாறு அவர் எழுதும் போது முதலில் சிவாஜியை மனதில் நினைத்துக் கொண்டாராம். அதன்பின் அவரது சொந்த ஊரான இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை நினைத்துக் கொண்டாராம். இப்படி மண்சார்ந்த நிகழ்வுகளை வைத்தே தேவர் மகன் கதையை உருவாக்கியிருக்கிறார்.

அதன்பின் அவரையே மனதில் வைத்து இந்தக் கதையை வெறும் 7 நாட்களில் எழுதி முடித்திருக்கிறார் கமல். தற்போது இந்தியன் 2 படத்திற்கான புரோமோஷன் பணிகளில் இருக்கும் கமல்ஹாசன் மும்பையில் நடந்த இந்தியன் 2 படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் தேவர் மகன் கதை எழுதியது பற்றி பகிர்ந்திருக்கிறார். தேவர் மகன் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews