அய்யா படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று கிட்டத்தட்ட 15 வருடத்துக்கும் மேல் பிஸியான முன்னணி ஹீரோயினாக நடித்து கொண்டிருக்கிறார் நயன் தாரா . லேடி சூப்பர் ஸ்டார் எனவும் பெயரெடுத்து விட்டார். இது மிக ஆச்சரியமான விசயம்தான் 15 வருடத்துக்கும் மேலாக கதாநாயகியாக நிலைத்திருப்பது சாதாரண விஷயமல்ல.
தமிழ் சினிமாவில் லெஜண்ட் நடிகைகள் பலர் குறிப்பிட்ட வருடங்களுக்கு மட்டும்தான் நிலைத்து நின்றிருக்கிறார்கள். நயன் தாரா மட்டுமே நீண்ட வருடங்களாக சினிமாவில் இருக்கிறார்.இருப்பினும் நயன் தாரா அதிகம் ஊடகங்களை சந்திப்பதில்லை பேட்டி கொடுப்பதில்லை. இந்நிலையில் வோக் பேஷன் இதழின் இந்தியப் பதிப்பு தன்னுடைய 12-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சிறப்பு பிரதி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில் கருத்து சொல்லியுள்ள நயன்
என்னை ஏளனமாக பார்த்தோர், சிரித்தோர் அனைவருக்கும் நான் ஒருபோதும் பதில் கூறியது கிடையாது. அவர்களுக்கான சிறந்த பதில்தான் என்னுடைய வெற்றிப் படங்கள் என்று கூறி இருக்கிறார்.
“ஊடகங்களை தவிர்ப்பது ஏன்?” என்ற கேள்விக்கு “நான் என்ன நினைக்கிறேன் என்பதை எப்போதும் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது என கூறி இருக்கிறார்.
பல முறை நான் ஊடகங்களால் தவறாக சித்தரிக்கப் பட்டதும் அதற்கு காரணம்” என விளக்கம் அளித்துள்ளார்.