கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம்’ஓ மை கடவுளே. அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடித்த இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக்குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தில் நாயகிகளில் ஒருவரான வாணிபோஜன் பயன்படுத்திய மொபைல் எண் தன்னுடைய மொபைல் எண் என்றும் இதனால் தனக்கு தேவையில்லாத அழைப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் எஸ்டேட் அதிபர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனையடுத்து இதுகுறித்து தான் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் அவர் திட்டமிட்டு வருகிறார். இந்த நிலையில் அந்த ரியல் எஸ்டேட் ஓனரை படக்குழுவினர் சமாதானம் செய்து வருவதாக கூறப்படுகிறது.