Muthu vs Rayaan : பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தமிழில் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வாரம் மிக முக்கியமான ஒரு வாரமாகவும் அனைத்து போட்டியாளர்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வருகிறது. கடந்த வார இறுதியில் ஜெஃப்ரி மற்றும் அன்சிதா ஆகிய இருவரும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்த நிலையில் மற்ற போட்டியாளர்களில் ஒருவர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் தற்போது நடைபெற்று வருகிறது.
இதனால் இறுதி சுற்றுக்கு முன்னேற அனைவரும் மிக ஆக்ரோஷமாகவும் விளையாடி வருகின்றனர். அது மட்டுமில்லாமல் இனிவரும் வாரங்களில் எலிமினேஷன் உக்கிரமாக இருக்கும் என்பதால் நேரடியாக இறுதிப் போட்டி சுற்றுக்கு முன்னேறி தங்களை காத்துக் கொள்வதற்காகவும் இந்த டாஸ்க்கில் வெற்றி பெற பலரும் துடியாய் துடித்து வருகின்றனர்.
சண்டை போட்ட ரயான்
அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் கொடுக்கப்பட்ட டாஸ்க் ஒன்றில் யார் வேகமாக ஓடி வந்து டெலிபோனை தொடுகிறார்களோ அவர்களை சுற்றி டாஸ்க அறிவிக்கப்படும் என்றும் பிக் பாஸ் குறிப்பிட்டிருந்தது. அந்த சமயத்தில் ரயான் மற்றும் முத்து ஆகிய இருவரும் வேகமாக டெலிபோனை தொடுவதற்கு ஓடிவர முதலில் முத்துவின் கை பட்டதாக தெரிகிறது. அவரது அருகே நிற்கும் ஜாக்குலின் மற்றும் தீபக் ஆகிய இருவருமே முத்து தான் முதலில் தொட்டார் என கூற உடன் ஓடிவந்த ரயான், நான் தான் முதலில் தொட்டேன் என்று வாதாடுகிறார்.
மற்றவர்கள் சொன்னதை ஏற்க தயாராக இல்லாத ரயான், தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார். ஆனால் இதற்கு நடுவே டெலிபோனை எடுத்து டாஸ்க்கிற்காக முத்துக்குமரன் காத்துக் கொண்டிருக்க, “யார் என்பதே இன்னும் முடிவாகவில்லை. அதற்குள் போன் எடுத்து பேச தொடங்கி விட்டாய்” என முத்துக்குமரனை பார்த்து கூறுகிறார். இதற்கு பதில் சொல்லும் முத்து, ‘இரண்டு பேர் சொல்லி விட்டார்கள்’ என கூறினாலும் இதை ஏற்க மறுத்த ரயான், ‘அவர்கள் இரண்டு பேரும் உன்னுடைய ஆட்கள்’ என்று கூறியதும் அந்த இடத்தில் சலசலப்பு உருவானது.
அவ்ளோ பெரிய ஆளில்ல நீ
ரயானின் வார்த்தையால் தீபக் மற்றும் ஜாக்குலின் ஆகியோரும் முத்து தொட்டதை பலமாக தெரிவித்தாலும், ‘நானும் இரண்டு பேரை நிப்பாட்டி நான் தான் தொட்டேன் என கூற வைக்க முடியும்’ என ஆவேசமாக பேசுகிறார் ரயான். இதனை பலமுறை விளக்க பார்த்தும் அதை ஏற்றுக்கொள்ள ரயான் தயாராக இல்லை என தெரிகிறது.
அது மட்டுமில்லாமல் மற்ற ஐந்து ஆண்களும் ஒன்று சேர்ந்து தனக்கு எதிராக ஆடுவதாகவும் ரயான் குற்றம் கூற, உன்னை பார்த்து யாரும் இங்கே பயப்படும் அளவுக்கு சவாலான ஆள் நீயில்லை என முத்துக்குமரன் பதிலடி கருத்தையும் தெரிவித்திருந்தார்.