Rayaan Speech : பிக் பாஸ் நிகழ்ச்சியில் Ticket To Finale டாஸ்க்கில் முத்து மற்றும் ரயான் ஆகிய இருவருக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பான விஷயம் பெரிய அளவில் வெடித்துள்ளது என்றே சொல்லலாம். டெலிபோனை யார் முதலில் தொடுவார்களோ அவர்களுக்கு டாஸ்க் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முத்துக்குமரன் வேகமாக ஓடி முதலில் அதனை தொடவும் செய்கிறார். ஆனால் அவருடன் இருக்கும் ரயானோ நான் தான் முதலில் தொட்டேன் என்று தன் பக்கம் நியாயத்தை தெரிவிக்கிறார்.
இவை அனைத்தையும் மிக அருகில் இருந்த கவனித்த தீபக் மற்றும் ஜாக்குலின் ஆகியோர் முத்து தான் தொட்டதாக ஆதரவு தெரிவித்தாலும் அதை ரயானால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் அனைவரையும் சேர்த்து ஒரே அணி என்று குறிப்பிடுவதுடன் மட்டுமில்லாமல் அனைத்து ஆண்களும் தனக்கு எதிராக ஒன்று சேர்ந்து விளையாடி ஜெயிக்க பார்க்கிறார்கள் என்று பகிரங்கமான குற்றச்சாட்டையும் முன் வைக்கிறார் ரயான்.
இப்படி எல்லாம் பேசலாமா?..
இப்படி ரயான் மற்றும் முத்துக்குமரன் பிரச்சனை சமீபத்தில் நடந்த டாஸ்க்கில் பெரிதாக வெடித்துள்ள நிலையில் ரயானின் சில கருத்துக்கள் பார்வையாளர்கள் மத்தியிலும் அதிக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் முத்துக்குமரன், மஞ்சரி உள்ளிட்ட சிலரை குறிப்பிட்டு ரயான் மறைமுகமாக தெரிவித்த கருத்தும் பலரை கொந்தளிக்க வைத்துள்ளது.
“பேச்சாளர்களை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொண்டு வந்ததற்கு பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு பேச்சாளர்களுக்கான களமாக மாறியதாக எனக்கு தோன்றுகிறது. இங்கே எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நாம் பேசித்தான் ஜெயிக்க வேண்டி உள்ளது. மற்றபடி நமது ஆக்ஷனை நிரூபித்து அதன் மூலம் வெற்றி பெற முடியாது. அது மட்டுமில்லாமல் அப்படி நாம் ஏதாவது செய்தால் கூட அதையும் பேசி தான் வெற்றி பெற வேண்டிய சூழல் இங்கே இருக்கிறது.
முத்து, மஞ்சரியை சாடிய ரயான்
இதற்கு முந்தைய சீசன்களில் இங்கே இருந்த அனைவரும் போட்டியாளர்களாக இருந்தனர். ஆனால் இந்த முறை நல்ல பேச்சாளர்களும் உள்ளே இருப்பதால் ஒரு தனிப்பட்ட நபரையும் தாண்டி அவர்கள் ஆதிக்கம் செலுத்துவதாக உள்ளது” என ரயான் தெரிவிக்கிறார்.
அந்த சமயத்தில் இதை கேட்டுக் கொண்டிருந்த பவித்ராவும், “இவர்கள் அனைவரும் அதிகம் பேசுவதால் நமக்கு பேச தெரியாது என்று நினைத்துக் கொள்கிறார்கள். நாம் பேச முயற்சித்தால் கூட அவர்களை எதிர்கொள்வதற்கு அது போதவில்லை” என்றும் தெரிவிக்கிறார். பேச்சாளர்கள் என்ற அடிப்படையில் முத்துக்குமரன் மற்றும் மஞ்சரி ஆகிய இருவர் தான் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்திருந்தனர்.
இதனால் அவர்களைப் பற்றிய பேச்சு தான் ஓடுவதாக தெரியும் நிலையில் இந்த கருத்து சரியா தவறா என்ற ஒரு விவாதமும் போய்க் கொண்டுள்ளது.