ரவி மோகன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி நடிகராவார். இவரது தந்தை மோகன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய படத்தொகுப்பாளர் ஆவார். இவரது சகோதரர் மோகன் ராஜாவும் திரைப்பட இயக்குனர் ஆவார். இதனால் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு எளிதாக கிடைத்தது என்று சொல்லலாம். 2003 ஆம் ஆண்டு ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் ரவி மோகன். அதிலிருந்து இவரை ரசிகர்கள் ஜெயம் ரவி என்று அழைத்தனர்.
முதல் படத்தின் மூலமாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளை பெற்றார் ரவி மோகன். தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தாஸ், மழை, உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம் பேராண்மை என தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்து 2010 காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் ரவி மோகன். மேலும் இவருக்கு பெண் ரசிகர்கள் அதிகமாக உண்டு. தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் ஆகவும் வலம் வந்தார் ரவி மோகன்.
தொடர்ந்து பூலோகம், நிமிர்ந்து நில், எங்கேயும் காதல், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், டிக் டிக் டிக் போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பேரும் புகழும் பெற்றார் ரவி மோகன். ஆனால் தனது மனைவியை பிரிகிறேன் என்ற அறிவிப்பை வெளியிட்டும் பாடகி கெனிஷாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் பல சர்ச்சையில் சிக்கினார் ரவி மோகன். அதற்கு பிறகு தனது பெயரை ஜெயம் ரவியில் இருந்து ரவி மோகன் என்று மாற்றி வைத்துக் கொள்வதாகவும் அறிவித்தார்.
இருந்தாலும் பல படங்களில் கமிட்டாகி பிசியான நடிகராகவே இருந்து வருகிறார் ரவி மோகன். இந்நிலையில் அவர் கமிட்டான இரண்டு படங்களில் இருந்து வேண்டாம் என்று விலகி விட்டதாக செய்திகள் வெளியானது. அது என்னவென்றால் பிடிஜி என்ற நிறுவனத்தின் கீழ் இரண்டு படங்கள் பண்ண கையெழுத்திட்டுள்ளார் ரவி மோகன். ஆனால் அந்த நிறுவனம் படப்பிடிப்பை தொடங்காமல் எந்த ஒரு வேலையுமே செய்யாமல் இவரது கால்ஷீட்டை வீணடித்திருக்கிறார்கள். அதனால் அந்த நிறுவனத்திடம் இருந்து கையெழுத்து பெற்ற இரண்டு படங்களிலும் நடிக்க முடியாது என்று வெளியே வந்து விட்டார் ரவி மோகன் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
