அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ இயக்கும் படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார்… ஆனா இது அந்த மாதிரி இல்ல…

ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான மற்றும் முன்னணி நடிகை ஆவார். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் கர்நாடகாவில் உள்ள குடகு மாவட்டத்தில் பிறந்து…

rashmika mandanna

ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான மற்றும் முன்னணி நடிகை ஆவார். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் கர்நாடகாவில் உள்ள குடகு மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். 2016 ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா. முதல் படத்தின் மூலமாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பிரபலமானார் ராஷ்மிகா மந்தனா.

அதைத் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு மொழிகளில் ஹிட் திரைப்படங்களில் நடித்து நேஷனல் கிரஷ் என்ற பெயரை பெற்றார் ராஷ்மிகா மந்தனா. 2021 ஆம் ஆண்டு சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். பின்னர் புஷ்பா திரைப்படத்தில் நடித்து தென்னிந்தியா முழுவதும் புகழ்பெற்றார் ராஷ்மிகா மந்தனா. பின்னர் விஜயுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்தார். அடுத்து ஹிந்தி திரை உலகில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

தற்போது தனுஷுடன் இணைந்து குபேரா திரைப்படத்தில் நடித்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. இந்த திரைப்படம் வெளிவர தயாராக இருக்கிறது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அது உண்மைதான் என்று ராஷ்மிகாவே ஒரு நிகழ்ச்சியில் ஒப்புக் கொண்டுள்ளார்.

தற்போது தென்னிந்திய சினிமாவில் மிக முக்கியமான பிசியான நடிகையாக இருந்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அல்லு அர்ஜுனனின் 22-வது படத்தை அட்லி இயக்குகிறார். இந்த திரைப்படம் மிக பிரம்மாண்டமாக அதிக பட்ஜெட்டில் உருவாகிறது. இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து ஜான்விக்கா ஜான்வி கபூர், மிருநாள் தாகூர், தீபிகா படுகோனே ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக ராஷ்மிகா மந்தனாவும் கமிட்டாகி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் புஷ்பா படத்தில் இருந்ததைப் போல இல்லாமல் இந்த அட்லீ இயக்கும் படத்தில் ராஷ்மிகா மந்தனா வேறொரு வித்தியாசமான ரசிகர்கள் எதிர்பார்க்காத முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் புஷ்பா படத்தில் இருக்கும் சாப்டான கதாபாத்திரமாக இல்லாமல் போல்ட் ஆன கதாபாத்திரம் ஆக இருக்கும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பபை உருவாக்கி இருக்கிறது.