சூர்யா ஹரி கூட்டணியில் இதுவரை வெளிவந்துள்ள வேல், ஆறு, சிங்கம் 1, சிங்கம் 2, சிங்கம் 3 போன்ற 5 படங்களும் மாஸ் ஹிட் அடித்தன. தமிழ் சினிமாவில் எப்போதும் இரண்டாம் பாகம் எதிர்பார்த்த அளவு ஹிட் அடிப்பதில்லை என்ற கருத்து நிலவி வந்தது.
அந்தக் கருத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் ஹரி, ஆமாங்க இவர் சூர்யாவை வைத்து சிங்கம் 2 பாகம் எடுக்க, அது முதல் பாகத்தைவிட மாஸ் ஹிட்டானது, அதேபோல் சிங்கம் 3 படமும் வேற லெவல் ஹிட் படமானது.
இந்தநிலையில் இந்த மாஸ் கூட்டணி இப்போது மீண்டும் இணைந்துள்ளது. அருவா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தினை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். , டி.இமான் இசையமைக்கிறார், இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக எந்த நடிகை நடிக்கப் போகிறார் என்பது குறித்து வதந்திகளே பரவி வந்தன.
மாளவிகா மோகனன், காஜல், த்ரிஷா, சமந்தா, நிவேதா பெத்துராஜ் எனப் பலரின் பெயரும் அடிபட்டு வந்தது. இந்தநிலையில் சூர்யாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க உள்ளதாக அவரே தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.
ராஷி கண்ணா ட்விட்டரில், “அரண்மனை 3 மற்றும் ஹரி இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறேன். மேலும் 2 தெலுங்கு படங்களில் நடிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.