என்னாங்கடா புதுசு புதுசா கிளப்புறிங்கன்னு வடிவேலு சொல்வது போல புது புதுசான வியாபார நுணுக்கங்களை சினிமாக்காரர்கள் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ராஷி கண்ணாவை தியேட்டர் கவுண்ட்டரில் டிக்கெட் விற்க வைத்துள்ளனர்.
நடிகை ராஷி கண்ணா, இமைக்கா நொடிகள், அடங்க மறு படங்களில் நடித்தவர். தெலுங்கில் சாய் தேஜா, ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள “பிரதி ரோஜு பாண்டேஜ் என்ற படம் இன்று வெளியாகிறது.
இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகை ராஷி கண்ணாவை தியேட்டரில் டிக்கெட் விற்க வைத்து கல்லா கட்டியுள்ளனர் படக்குழு.
ராஷி கண்ணாவும் தனது படத்தின் பிரமோஷனுக்காக ஹைதராபாத்தில் உள்ள பிரபல திரையரங்கில் டிக்கெட் விற்கும் பணியில் இறங்கியுள்ளார்.
ரூம் போட்டு யோசிக்கிறாங்களோ.