தேன் சொட்டும் பாடல் கொடுத்த இளையராஜா-ராமராஜன் கூட்டணி

By Staff

Published:

ஆரம்பத்தில் மண்ணுக்கேத்த பொண்ணு உட்பட பல படங்களை இயக்கி நடித்தவர் ராமராஜன். கங்கை அமரன் மற்றும் இவரது காம்பினேஷனில் வந்த படங்கள் இவரை உச்சத்துக்கு உயர்த்தியது.

047718aa29006cac01386664347c748f

ஆரம்பகாலங்களில் இருந்து எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்து வந்த ராமராஜன் கங்கை அமரன் இயக்கிய எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் நடித்த பிறகுதான் வெளியுலகம் அதிகம் அறிந்த நபரானார்.

இந்த படத்தில் பசுவை வைத்துக்கொண்டு செண்பகமே செண்பகமே என்ற பாடலில் தோன்றியதால் பசுநேசன் என்றும், டவுசர் என்றும் அந்த நேரத்தில் சிலர் கேலி செய்ய தொடங்கினர். இந்த கேலி பேச்சுக்களும், கிண்டல்களுமே ராமராஜனின் ப்ளஸ் ஆகி யாராலும் கொடுக்க முடியாத சில்வர் ஜூப்ளி படங்களை கொடுக்க துவங்கினார். கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் மதுரை நடனா திரையரங்கில் 485 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

அந்த நேரத்தில் ராமராஜனின் படங்களுக்கெனவே ஸ்பெஷலாக இளையராஜா பாடல்களை உருவாக்கியது போல் அவ்வளவு அழகாக அவரது படத்தின் பாடல்கள் இருந்தது.

குறிப்பாக 87, 88, 89, 90களில் ராமராஜனின் ராஜ்ஜியமும், ராகதேவனின் ராஜ்ஜியமும் தான் தமிழ் திரையுலகில் கோலோச்சி கொண்டிருந்தது. இருவரும் இணைந்து தனி ராஜாங்கமே நடத்தினார்கள்.

ராமராஜனின் படம் ஹிட் ஆகவில்லை என்றாலும் கூட பாடல்கள் அதிரி புதிரி ஹிட் ஆனது. ராமராஜன் இளையராஜா கூட்டணியை சேர்த்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டனர்.

கரகாட்டக்காரன், ராஜா ராஜாதான், கிராமத்து மின்னல், எங்க ஊரு பாட்டுக்காரன், எங்க ஊரு காவல்காரன்,தங்கமான ராசா, ஊரு விட்டு ஊரு வந்து, என்னெ பெத்த ராசா, செண்பகமே செண்பகமே, ராசாவே உன்னை நம்பி என இளையராஜா ராமராஜன் காம்பினேஷனில் அனைத்தும் தேன் சொட்டும் பாடல் உள்ள படங்களாகவும், பின்னணி இசை உள்ள படங்கள் ஆகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment