குடும்பத்தினரிடம் கூட சொல்லாமல் சோகத்தை மறைத்த ரஜினி..! எவ்ளோ பெரிய மனுஷனப்பா..?!

By Sankar Velu

Published:

தர்பார் படத்தோட ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்டு அவர் பேசியது மனதைத் தொட்டது. பதினாறு வயதினிலே வந்து இவர் பிரபலமான நேரத்தில் இவர் நடிக்க வந்த புதிதில் எவ்வளவு அவமானப்படுத்தப்படுறோம்னு கேஷ_வலா சொல்றாரு. அந்த நிகழ்ச்சியில் ரஜினி பேசியதைப் பார்த்து அவரது மனைவி லதா ரஜினிகாந்த், பிள்ளைகள்லாம் இருக்காங்க. அவங்க ரியாக்ஷன் ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது.

இந்த விஷயத்தை அவர் வீட்டுல கூட சொல்லல போல. ஏன்னா அப்பேர்ப்பட்ட சூப்பர்ஸ்டாருக்கு அந்த நேரத்துல ஒரு தயாரிப்பாளர் எவ்வளவு பெரிய அவமானத்தைக் கொடுத்துருக்காரு, அந்த நேரத்துல அவர் சூப்பர்ஸ்டாரா இல்லன்னாலும் நாடறிஞ்ச நடிகரா இருந்தாரு. அது என்னன்னா ஒரு படத்துல இவரைப் புக் பண்றாங்க. அட்வான்ஸ் கேட்குறாரு.

கேட்டா சூட்டிங்ஸ்பாட்ல கொடுக்கறேன்னு சொல்லிடுறாங்க. அப்புறம் கார்ல ஏறி ஏவிஎம் வர்றாரு. அங்கு வந்து இறங்கியதும் அட்வான்ஸ் கேட்டா, அந்தத் தயாரிப்பாளர் சொல்றாரு. ‘அட்வான்ஸ் இல்லேன்னா நடிக்க மாட்டியா? உனக்கு வந்து அட்வான்சும் கிடையாது. படத்துல ரோலும் கிடையாது’ன்னு அனுப்பிடறாரு.

dharbar
dharbar

அது மட்டுமல்லாம ‘நீ என்ன பெரிய நடிகனா? தொலைச்சிடுவேன் உன்னை… உனக்கு எதுவுமே தர முடியாது. நடந்து போ’ன்னு சொன்னாராம். ‘ஏன் கார்ல தான கூட்டிட்டு வந்தீங்க.. அதுலயே கொண்டு போய் விடுங்க’ன்னு சொன்னாராம் ரஜினி. ‘கார் எல்லாம் கொடுக்க முடியாது. நடந்து போ’ன்னு அவர் சொல்லிட்டாராம்.

அப்புறம் அவர் அவமானம் தாங்க முடியாம என்ன பண்றதுன்னே தெரியாம நடந்தே போனாராம். கோடம்பாக்கம் பிரிட்ஜ் மேல ஏறி அங்கிருந்து வீட்டுக்குப் போனாராம். அதைக் கேட்குற எல்லாருக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

ஏன்னா அந்த டைம்ல அவரு நடிச்ச 16 வயதினிலே படத்துல அவ்ளோ பேரு. கமலை விட அவருக்குத் தான் பேரு. அவர் நடந்து வரும்போது கூட எல்லா இடத்துலயும் 16 வயதினிலே பட போஸ்டர் தான் ஒட்டிருக்காங்க. அதைப் பார்த்துக்கிட்டே வர்றாரு. பஸ்ல போறவங்கள்ல ஒருத்தர் ‘ஏ பரட்டை..’ன்னு சொல்றாரு.

அந்த அவமானத்தை எப்படி துடைக்கிறதுன்னு தீவிர சிந்தனையிலேயே நடிச்சிருக்காரு. அந்த சம்பவம் நடந்து சில படங்கள் நடிக்கிறாரு. பெரிய அளவில் பாப்புலரா ஆகிறார். வெளிநாட்டுல போய் இத்தாலியன் பியட் கார் வாங்கி டிரைவரையும் வெளிநாட்டுல இருந்து வரவைக்காரு.

எந்த இடத்துல அவமானப்படுத்தப்பட்டோமோ அந்த ஏவிஎம்முக்கே போய் கார்ல ரவுண்டு அடிச்சிட்டு ஸ்டைலா சிகரெட்டைப் பற்ற வைக்கிறார். அவருக்கு நேர்ந்த அவமானத்தை வாழ்ந்து காட்டிப் பழி தீர்த்தார். இவ்ளோ பெரிய நடிகருக்கு உள்ளே இத்தனை அவமானத்தை எப்படி இவ்வளவு காலமா மறைச்சி வச்சிருந்தாருன்னு எல்லாருக்குமே ஒரே ஆச்சரியம்.

மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் கே.சங்கர் தெரிவித்துள்ளார்.

தர்பார் படத்துக்கு முதல் நாள் ரொம்ப வரவேற்பு இருந்தது. முதல் நாளில் 65 கோடியை உலகம் முழுவதும் வசூலித்தது. ஆனால் பின்னால் அதன் வசூலைப் பாதிக்கக் கொரோனா ஒரு காரணமாக அமைந்தது. இந்தப் படம் ஓடும்போதே ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.