நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா தற்போது வெளியிட்ட வீடியோ ஒன்றில் தனது கணவரிடம் இருந்து பிரிந்துவிட்டதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். ராஜ்கிரணின் எதிர்ப்பையும் மீறி சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவுடன் ரகசிய திருமணம் செய்துக் கொண்டார் பிரியா என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா சின்னத்திரை நடிகரான முனிஷ் ராஜா என்பவரை காதலித்து 2022 ஆம் ஆண்டு வீட்டை விட்டு சென்று ரகசிய திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்றில் பேசிய பிரியா சில மாதங்களுக்கு முன்னதாக நாங்கள் பிரிந்து விட்டோம். மேலும் எங்கள் திருமணம் சட்டப்படி நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ராஜ்கிரண் வளர்ப்பு மகள் கதறல்:
முனிஷ் ராஜா சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் சம்பந்தம் என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். அதையடுத்து அவர் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். சின்னத்திரையில் பிரபலமான அளவிற்கு திரைப்படங்களில் பெரிய அளவில் அவர் வரவேற்பை பெறவில்லை. இதை தொடர்ந்து முனிஷ் ராஜா கடந்த சட்டசபை தேர்தலில் பழனி தொகுதியில் சுயேட்சை உறுப்பினராக போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார்.
நடிகர் ராஜ்கிரணின் மகள் ஜீனத் பிரியாவுக்கும், முனீஸ் ராஜாவுக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் இரண்டு பேர் வீட்டிலும் இவர்களுடைய காதலை எதிர்த்தனர். மேலும், முனீஸ் ராஜும் பிரியாவும் வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
அதை பற்றி பேசிய ராஜ்கிரண் பிரியா என்னுடைய மகள் இல்லை வளர்ப்பு மகள், முனீஷ் ராஜ் என்னுடைய வளர்ப்பு மகளை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். என்னுடைய பெயரை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இதனை செய்திருகிறார். எனவே என்னுடைய பெயரை எந்த இடத்திலும் அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று நடிகர் ராஜ்கிரண் கூறியிருந்தார்.
மன்னிச்சிடுங்க அப்பா:
நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா தற்போது வெளியிட்ட வீடியோ ஒன்றில் நானும் முனிஸ் ராஜும் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துக்கொண்டோம் ஆனால் தற்போது நான் அவருடன் இல்லை நாங்கள் பிரிந்து தனியாக இருக்கிறோம். நாங்கள் பிரிந்து சில மாதங்களானது. மேலும் இந்த திருமணம் சட்டப்ப்படி நடக்க வில்லை.
இந்த திருமணத்தினால் நான் என்னை வளர்த்த என் அப்பாவை மிகவும் கஷ்டப்படுத்திவிட்டேன். ஆனால் எனக்கு ஒரு கஷ்டம் என்றதும் என் அப்பா எனக்காக வந்து நின்றார். இதற்காகவே நான் எத்தனை முறை அவரிடம் மன்னிப்பு கேட்டாலும் போதாது, என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா என்று கண் கலங்கி பேசியுள்ளார்.