வானொலி பேட்டியில் ஒன்றுமே பேசாத ரஜினி.. கடைசி வரை ஒலிபரப்பாமல் போன காரணம் இதான்..

By John A

Published:

இலங்கை வானொலி தமிழ் மக்களுக்குக் கிடைத்த பொக்கிஷம். ஏனெனில் எந்த தொழில் நுட்பங்களும் வளராத அந்தக் காலகட்டத்தில் பத்திரிக்கைகள் வாங்கும் பழக்கமும் அவ்வளவாகக் கிடையாது. ஏனெனில் குறைவான கல்வியறிவு விகிதம் காரணமாக வாசிப்பாளர்கள் என்பது மிகக் குறைவே. இந்த நிலையில் பாமரனுக்கும் செய்திகளை அள்ளித் தந்த தகவல் களஞ்சியமாக விளங்கியது இலங்கை கொழும்பு சர்வதேச வானொலி.

இலங்கை வானொலியால் புகழ்பெற்ற பாடல்கள் ஏராளம். இலங்கை வானொலியைக் கேட்டுதான் இரண்டு, மூன்று தலைமுறையை வளர்ந்தது. அந்த அளவிற்கு மக்களிடத்தில் ஒன்றி இருந்தது எனலாம். இதில் அறிவிப்பாளராகப் பணியாற்றியவர்தான் பி.எச். அப்துல் ஹமீது. இன்றளவும் தூய தமிழில் உரையாடும் பழக்கம் கொண்ட இவர் அந்தக் காலத்தில் அறிவிப்பாளர்களில் புகழ் பெற்றவராக விளங்கினார்.

கற்பனைக் காட்சியில் எதேச்சையாக வந்த விமானம்.. பரபரப்பாகிய படக்குழு.. அசத்தலாக வந்த கமல் பட சூப்பர் சீன்..

இவர் தொகுத்தளிக்கும் நடையே அலாதியானது. தமிழை நாம் வாசிக்கக் கற்றுக் கொள்வதைக் காட்டிலும், செவி வழியாக இவர் பேச்சைக் கேட்டாலே தூய தமிழ் நாவில் தாண்டவமாடும். பின்னர் சன்டிவியில் லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி மூலம் உலக அளவில் பிரபலம் ஆனார்.

இவர் ஆரம்ப காலகட்டத்தில் இலங்கை வானொலி நிலையத்திற்காக ரஜினிகாந்தின் பேட்டி ஒன்றை பதிவு செய்தார்கள். நடிகர் ரஜினிகாந்த் அப்போது தீ படத்தின் படப்பிடிப்பிற்காக இலங்கை சென்றிருந்த சமயம் அது. அப்போது அப்துல் ஹமீது அவரிடம் பல கேள்விகளைக் கேட்டுள்ளார். ஆனால் எதற்குமே ரஜினி ஆமாம்.. இல்லை .. அப்படித்தான் என்று பதிலளித்துள்ளார். எந்த ஒரு பதிலையுமே அவர் விரிவாகக் கூற வில்லை.

ஏனெனில் அப்போது அப்துல் ஹமீதுக்கு பேட்டிகள் எடுத்து பழக்கம் கிடையாது. எனவே விருந்தினரிடம் எப்படி கேள்விகள் கேட்டு பதிலை வாங்குவது என்று தெரியாதாம். இதனால் ரஜினி ஆம்.. இல்லை என்று சொல்லும் அளவிற்கே அவரது கேள்விகள் இருந்தது. இதனால் இந்தப் பேட்டியை ஒலிபரப்ப முடியாமல் போனது.

பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின் சந்திரமுகி வெற்றி விழாவில் ரஜினியைச் சந்தித்த அப்துல் ஹமீது இந்த பேட்டியை ஞாபகப்படுத்தி இன்னமும் ஒலிபரப்பவில்லை என்ற தகவலையும் சொன்னாராம். இதைக் கேட்டு ரஜினி சிரித்திருக்கிறார்.