வைபவ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் ஆவார். இவரின் இயற்பெயர் சுமந்த் ரெட்டி என்பதாகும். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தார். இவரது தந்தை கோதண்டராமி ரெட்டி தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வைபவ் 2007 ஆம் ஆண்டு தனது தந்தை கோதண்டராமி இயக்கிய ‘கோடவா’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். பின்னர் 2008 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கிய ‘சரோஜா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வணீக ரீதியாகவும் இப்படம் வெற்றிப் பெற்றது.
முதல் படம் வெற்றியடைந்ததை அடுத்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார் வைபவ். தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து பணியாற்றிய வைபவ் ‘கோவா’, ‘அஜித் நடித்த ‘மங்காத்தா’, ‘சென்னை 600028’ ஆகிய படங்களில் நடித்தார். மங்காத்தா படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
பின்னர் ‘மேயாத மான்’ திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்தார் வைபவ். இப்படத்தில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டைப் பெற்றார் வைபவ். இது தவிர ‘அரண்மனை’, ‘பேட்ட’, ‘இறைவி’, ‘முத்தின கத்திரிக்கா’ போன்ற திரைப்படங்களில் கேமியோ, சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார் வைபவ்.
தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட வைபவ், பேட்ட படத்தில் ரஜினிகாந்த் அவர்களுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால், பேட்ட ஷூட்டிங் காசியில் நடந்தப்போ ஒருத்தர் ரஜினி சார் கிட்ட வந்து, உங்கள எங்கேயோ பாத்திருக்கேன், நீங்க படம் நடிச்சிருக்கீங்களா அப்படினு கேட்டார். அதற்கு ரஜினி சார் பொறுமையா எந்திரன் படத்தில நடிச்சது நான் தான் அப்படினு பொறுமையா பதில் சொனார். நான் அவர்கிட்ட ஏன் சார் இவங்களுக்கு எல்லாம் பதில் சொல்றிங்க அப்படினு கேட்டேன். அதற்கு அவர், நம்மள எல்லாரும் தெரிஞ்சு வச்சிருக்கணும்னு அவசியம் இல்ல அப்படினு சொன்னார். ரஜினிகாந்த் சார் இவ்வளவு எளிமையானவரா அப்படினு நேர்ல பாத்து அசந்து போயிட்டேன் என்று கூறியுள்ளார் வைபவ்.