தமிழ் சினிமாவில் நடிகர்கள், காமெடி நடிகர், நடிகைகள், வில்லன் கதாபாத்திரங்களில் வருபவர்கள் என அனைவருக்குமே ஒவ்வொரு குறிப்பிட்ட திறமை இருக்கும். உதாரணத்திற்கு வடிவேலு என நாம் எடுத்துக் கொண்டால் அவரது உடல் பாவனையில் தொடங்கி பல விஷயங்கள் பார்க்கும்போதே சிரிப்பை வர வைக்கும் அளவுக்கு இருக்கும்.
அவரைப் போல ஒவ்வொரு காமெடி கலைஞனுக்கும் ஒவ்வொரு விதமான நடிப்பு திறன் இருக்கும் நிலையில் அதில் கவுண்டமணியின் டைமிங் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவை ஆகும். அவரும் செந்திலும் இணைந்து ஒரு திரைப்படத்தின் காமெடி காட்சிகளில் தோன்றி விட்டால் நிச்சயம் அதை பார்ப்பவர்கள் சிரித்தே கொஞ்ச நேரம் அவதிப்பட்டு விடுவார்கள்.
அசராத கவுண்டமணி
அந்த அளவுக்கு கவுண்டமணி – செந்தில் காம்போ திரையில் மிகப்பெரிய அளவில் ஒர்க் அவுட்டாகி உள்ள நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த காமெடி காட்சிகளை இப்போது பார்த்தாலும் வயிறு குலுங்க சிரிப்பவர்கள் இங்கே ஏராளம். பலரும் உடல் பாவனைகளைக் கொண்டு காமெடியை உருவாக்கும் நிலையில் கவுண்டமணியோ அவர் பேசும் ஸ்லாங் மற்றும் டைமிங் உள்ளிட்ட விஷயங்கள் மூலமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடுவார்.
திரையில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் கூட எதிரே இருப்பவர்கள் யார் என்பதை பொருட்படுத்தாமல் உடனடியாக அவர்களை கலாய்த்து தள்ளும் பழக்கம் கொண்ட கவுண்டமணி ஏதாவது மேடையில் ஏறினாலே மற்ற நடிகர்களை பற்றி சர்வ சாதாரணமாக பேசிவிடுவார். அப்படி ஒரு சூழலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் ஒரு காலத்தில் கவுண்டமணியை வேண்டுமென்றே சில படங்களில் ஒதுக்கியதாகவும் அதற்கான காரணம் பற்றிய தகவலும் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.
கவுண்டமணி கூட நடிக்க முடியாது..
இது தொடர்பாக வெளியான தகவல்களின் படி ஆரம்பத்தில் ரஜினி மற்றும் கமல் ஆகியோர் கவுண்டமணி தங்களுடன் இணைந்து நடிக்க எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன கலாய்த்தாலும் அதை பெரிதாகவும் அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. ஆனால் இவர்களுக்கெல்லாம் ஒரு ஸ்டார் வேல்யூ வந்ததற்கு பின்னர் கவுண்டமணி ஏதாவது சொல்லிவிட்டால் நன்றாக இருக்காது என வேண்டுமென்றே அவரை தங்களின் திரைப்படங்களில் நடிக்க வைக்க மறுத்ததாக தெரிகிறது.
இதனால் ரஜினி, கமல் மட்டுமில்லாமல் மற்ற சில முன்னணி நடிகர்கள் கூட கவுண்டமணியுடன் காம்போ காட்சிகள் வேண்டாம் என்றும் தனியாக அவருக்கு காமெடி டிராக் இருந்தால் பரவாயில்லை என்றும் கூறியுள்ளதாக தெரிகிறது. ஆனால் இதற்கு மத்தியில் கவுண்டமணி – செந்தில் காம்பினேஷனில் வெளியான படங்களின் காமெடி காட்சிகள் ஒர்க் அவுட் ஆனதால் மீண்டும் கவுண்டமணியை தங்களின் திரைப்படங்களில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இணைத்து நடிக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.
ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்கள் கவுண்டமணியை சில படங்களில் சேர்க்காத போதும் அவரது மார்க்கெட்டை பார்த்து மீண்டும் இணைத்து கொண்டாலும் எப்போதும் போல முன்னணி நடிகர்கள் என்றும் பாராமல் அவரை கவுண்டமணி கலாய்த்து தள்ளினார் என்பது தான் வரலாறு. இதற்கு உதாரணமாக மன்னன், பேர் சொல்லும் பிள்ளை என பல திரைப்படங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.