சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளான இன்று அவர் நடிக்கும் 171-வது படமான கூலி படத்தின் அப்டேட் வெளியானது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே ரஜினியின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இதனையடுத்து ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அறிமுகப்படுத்தப்பட்டது.
ரஜினியுடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அமீர்கானும் முக்கிய வேடத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுவென நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தற்போது கூலி படத்தில் பிஸியாக இருக்கிறார் ரஜினிகாந்த்.
சும்மா.. சும்மா என்னை உதைக்காத..! எம்.ஆர்.ராதாவை ஒங்கி உதைத்த எம்.என்.ராஜம்..
கடந்த சில மாதங்களுக்கு முன் டீஸர் வெளியாகி ரசிகர்களை வைப் ஆக்கிய நிலையில் இன்று Chikitu Vibe என்ற பாடலின் கிளிம்ப்ஸ் வெளியாகி உள்ளது. சுமார் 55 வினாடிகள் ஒளிபரப்பாகும் இந்த கிளிம்ப்ஸ்-ல் ரஜினியின் பழைய நடன அசைவுகள் இடம்பெற்றுள்ளது. சும்மாவே திரையில் ரஜினி வந்தாலே விசில் பறக்கும். தற்போது அவரின் ஸ்டைலிஷான நடன அசைவுகள் ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது. 74 வயதிலும் இளைஞர்களுக்கு நிகராக அதே மிடுக்கு, வேகம், சுறுசுறுப்புடன் ரஜினி ஆடும் நடனம் பழைய ரஜினியை நினைவுப்படுத்துகிறது. இப்பாடலை டி.ராஜேந்தர், அனிருத், தெருக்குரல் அறிவு ஆகியோர் பாடியிருக்கின்றனர்.
ரஜினியின் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திரைத்திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். மேலும் ரசிகர்களும் அவரது பிறந்தநாளினை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.