கர்நாடகாவிற்கே திரும்ப ஓடிடலாமா? கலைஞரால் மிரண்ட ரஜினி!

Rajinikanth: கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா தருணத்தில் பலரும் அவர் குறித்த மலரும் நினைவுகளை பகிர்ந்து வருகின்றர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பத்திரிக்கை ஒன்றில் கலைஞர் மு. கருணாநிதி குறித்து கட்டுரையை எழுதியுள்ளார்.

ரஜினி நடித்த ‘முரட்டுக் காளை’, ‘நெற்றிக் கண்’, ‘ராணுவ வீரன்’, ‘குடும்பம் ஒரு கதம்பம்’, ‘போக்கிரி ராஜா’ போன்ற பல வெற்றி படங்களை இயக்கிவர் எஸ்.பி முத்துராமன். அவருடைய தந்தை ராம சுப்பையா தீவிர திராவிட கட்சி விசுவாசி. எஸ்.பி முத்துராமன் மூலம் சூப்பஸ்டார் ரஜினிகாந்த், கலைஞர் பற்றி நிறைய தகவல்களை தெரிந்து கொண்டுள்ளார். இதனால் கலைஞர் மீது மிகுந்த மரியாதையும், தனிப் பிரியமும் ஏற்பட ஆரம்பித்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், கலைஞரை ஒரு தர்ம சங்கடமான நிலையில், சூப்பர்ஸ்டார் சந்திக்கவேண்டி வருகிறது.

என்னவென்றால், ரஜினி நடிக்க போகும் படத்தின் தயாரிப்பாளர் கலைஞரின் நண்பர், அவரின் வேண்டுதலால் கலைஞரும் அந்த படத்திற்கு வசனம் எழுதித் தர சம்மதிக்கிறார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் இருவரின் வெற்றியிலும் கலைஞர் வசனம் பெரும் பங்கினை வகுத்தது. அப்படிப்பட்ட ஒருவர் தன்னுடைய படத்திற்கு வசனம் எழுதப் போகிறார் என்று தெரிந்ததும் சூப்பர்ஸ்டார் மகிழ்ச்சி அடையவில்லை. மாறாக, பயமே வந்திருக்கிறது. ‘சாதாரண வசனங்களை பேசுவதற்கே நான் அரும்பாடு படுகிறேன். கலைஞர் வசனத்தை என்னால் பேசி நடிக்க முடியாது, நான் கர்நாடகவிற்கே ஓடிவிடுவேன்’ என கூறியுள்ளார்.

பின் கலைஞரை சந்திக்கும் வாய்ப்பின்னை ஏற்படுத்தி தருமாறு தயாரிப்பாளரிடம் கேட்கவும் தயாரிப்பாளரும் ரஜினியை அழைத்துக் கொண்டு கலைஞரின் வீட்டிற்கு சென்றுள்ளார். கலைஞரும் ரஜினியின் நிலையை புரிந்து கொண்டு, தான் அந்த சமயத்தில் மிகவும் பிசியாக உள்ளதாக கூறி சமாளித்துள்ளார். எம்.ஜி ஆரும், சிவாஜி கணேசனும் கலைஞரின் வசனத்தை பேசி பட்டி தொட்டியெல்லாம பரவினர். எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தும் பயன்படுத்த முடியாமல் போனதே என எண்ணி வருந்தியதாக அந்தக் கட்டுரையில் சூப்பர்ஸ்டார் ரஜினிஜாந்த் எழுதியுள்ளார்.