பாபா ரீ-ரிலீஸ்ஸிற்காக டப்பிங் பணியில் இறங்கிய ரஜினி! வேலையை வேகமாக தொடங்கிய படக்குழு!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பாபா திரைப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்திருப்பார். இப்படத்தை ரஜினிகாந்த் தனது சொந்த நிறுவனமான லோட்டஸ் இன்டர்நேஷனல் மூலம் தயாரித்தார். 2002ல் வெளியான இந்த…

baba rajini

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பாபா திரைப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்திருப்பார். இப்படத்தை ரஜினிகாந்த் தனது சொந்த நிறுவனமான லோட்டஸ் இன்டர்நேஷனல் மூலம் தயாரித்தார்.

2002ல் வெளியான இந்த பாபா படத்தை ரஜினி மீண்டும் ரீ ரிலீஸ் பண்ண போவதாக செய்திகள் சமீபத்தில் வெளியானது. படத்தின் எடிட்டிங் வேலைகள் வேகமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படத்தின் ப்ரி ரிலீஸ் குறித்து மாஸான தகவல் வெளியாகியுள்ளது, படம் ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி பாபா திரைக்கு வருவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

20 ஆண்டுகளுக்கு பின் படம் மீண்டும் திரைக்கு வருவதால் டிஜிட்டல் முறையில் தொழிநுட்ப வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மானும் தனது வேலையை முடித்துவிட்டார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள திரையரங்குகளில் புதிய கட் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்

இந்நிலையில் பாபா படத்தின் புதிய காட்சிகளுக்கு ஏற்ப டப்பிங் பேசி வருகிறார் ரஜினி. அந்த புகைப்படங்கல் தற்போழுது வைரலாகி வருகிறது.

படப்பூஜையில் தமிழ் பாரம்பரியம் மாறாமல் வேஷ்டி சட்டையில் வந்த தனுஷ்!

மேலும் ரஜினி தனது 169 வைத்து படமான ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிப்பில் நெல்சன் இந்த படத்தை இயக்குக்கிறார்

ரஜினியின் 170-வது திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளதாக உறுதியான தகவல் கிடைத்துள்ளது.