சிவாஜி கண்ணீர் மல்க ரஜினிக்கு எழுதிய கடிதம்!.. அது என்ன தெரியுமா..?

By Sathish

Published:

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கான இலக்கணத்தை எழுதியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நாடகத் துறையின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்ததால் இவரவு கணீர் குரல் வளம் தான் தனி அடையாளத்தை இவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. ஒரு காட்சிக்கு என்ன தேவை என்பதை தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தக் கூடியவர். தெளிவான வசன உச்சரிப்பு மற்றும் உணர்ச்சிகளை தன் உடல் மொழியின் மூலம் வெளிப்படுத்தி நடிப்பதில் இவருக்கு நிகர் இவரே.

அக்கால கட்டத்தில் எம்ஜிஆர் எனும் மாபெரும் கலைஞனுக்கு செம போட்டியாளராக விளங்கியது மட்டுமின்றி தமிழ் சினிமாவின் உச்சம் தொட்ட நடிகராகவும் விலகினார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தார். அதன் பின்னர் என்பதுகளின் தொடக்கத்தில் ரஜினி கமல் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்த காலம் அது. அந்த சமயத்தில் சிவாஜி குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

குறிப்பாக கமலுடன் நடித்த தேவர் மகன் திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் இவருக்கு தனி பெயரை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தனது ஆஸ்தான ரசிகனான ரஜினியுடன்”படையப்பா” திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இப்படத்தில் ரஜினிக்கு அப்பா கேரக்டரில் நடந்திருப்பார். இவரது வருகை முதல் பாதி வரை மட்டுமே இருந்தாலும் இவருக்கு இந்தப் படத்தில் நடிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது. நடிப்பிற்குகாக இவர் வாங்கிய அதிகபட்ச தொகையாகும்.

80களில் பிறகு சிவாஜி கணேசன் தான் நடிக்கும் படத்திற்கு சம்பளத்தை நிர்ணயிக்காமல் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் இடம் உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை கொடு என்று கூறி விடுவாராம். அதேபோல் படையப்பா படத்திற்கும் தயாரிப்பாளர் தேனப்பனிடம் மற்றவர்களிடம் சொன்னதை போலவே சொல்லியிருக்கிறார். இந்த படத்திற்காக 10 முதல் 20 லட்சம் வரை சம்பளமாக தருவார்கள் என்று எதிர்பார்த்து இருந்தார் சிவாஜி.

ஆனால் சுவாரசியம் என்னவென்றால் ஒரு கோடி ரூபாய் காண காசோலையை வழங்கியுள்ளார். அதை பார்த்ததும் 10 லட்சம் என முதலில் எண்ணி காசோலை கொண்டு சென்றுவிட்டாராம். பிறகு தன் மூத்த மகனான ராம்குமாரிடம் காசோலையை கொடுத்திருக்கிறார். அப்போதுதான் அது ஒரு கோடிக்கணக்கான காசோலை என்ற விஷயம் தெரிய வந்திருக்கிறது. சிவாஜியோ அதில் குறிப்பிட்டபட்ட தொகையான ஒரு கோடியை பார்த்து தவறுதலாக ஒரு பூஜ்ஜியத்தை காசோலையில் சேர்த்து விட்டார்களோ..? என்று நினைத்து தயாரிப்பாளரிடம் விஷயத்தை சொல்லி இருக்கிறார்.

அப்போது சிவாஜி இடம் தயாரிப்பாளர் நடந்த விஷயத்தை கூறியிருக்கிறார். அதாவது இந்த படத்தில் நடிப்பதற்கு ஒரு கோடி ரூபாய் சிவாஜிக்கு சம்பள தர வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்னிடம் சொன்னார் என்று கூறினார். இதை கேட்ட சிவாஜிக்கு ஆழ்ந்த சந்தோஷத்தில் கண்ணீர் பொங்கியது பின்னர் வீட்டிற்கு வந்து கண்ணீர் மல்க அவருக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி இருக்கிறார்.