இசைஞானி இளையராஜா புதுமுக ஹீரோவோ அல்லது உச்ச ஹீரோ யாராக இருந்தாலும் தனது மாயாஜால இசையால் சுமாராக இருக்கும் படங்களை கூட ஹிட் வரிசையில் சேர்த்து விடுவார்.
ஒரு காலத்தில் ரஜினி கமல் போன்ற சூப்பர் ஸ்டார் களுக்கு தன்னுடைய இசையால் அவர்களுக்கு பல ஹிட் பாடல்களைக் கொடுத்தவர். அதேபோல மோகன் ராமராஜன் போன்ற நடிகர்களுக்கும் தனது இசையால் அவர்களையும் சிறிது காலம் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்க செய்தவர்.
ஒரு முறை இளையராஜாவிடம் சூப்பர் ஸ்டார் ரஜினி பகிர்ந்து கொண்ட சம்பவம் ஒன்றை கங்கை அமரன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. ரஜினி கமல் என முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாமல் தனது இசையின் மூலம் பல நடிகர்களை முன்னணி நட்சத்திரங்களாக மாற்றியவர். இப்போது பல இளம் இசையமைப்பாளர்கள் பல வெற்றிகளை கொடுத்து வந்தாலும் அவர்களுக்கு இணையாக இப்போதும் பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.
இதனிடையே ரஜினிகாந்த் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் ஒரு படத்தின் கதையில் நம்பிக்கை இல்லை என்றும், இதனால் படத்தில் இருந்து விலகுவதாக கூறியதாகவும், அதற்கு இளையராஜா இந்த படம் கண்டிப்பாக ஹிட் ஆகும். அப்படி ஹிட் ஆகவில்லை எனில் நான் ஹார்மோனியத்தை எடுப்பதையே நிறுத்தி விடுகிறேன் என்று ரஜினிகாந்திடம் சபதம் போட்டுள்ளார்.
எம்ஜிஆருக்கு மதுவை ஊற்றிக் கொடுத்த இயக்குனர்! திறமையாக சமாளித்த மக்கள் திலகம்!
சமீபத்தில் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பங்கேற்ற கங்கை அமரனிடம், முன்னணி இயக்குனராக இருந்தும் நீங்கள் ஏன் ரஜினி கமல் படங்களை இயக்கவில்லை என்று கேட்டபோது, அதற்கு கங்கை அமரன் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ராஜாதி ராஜா படம் எங்கள் கதைதான். ஆனால் அண்ணன் (இளையராஜா) இந்த படத்தை ஆர். சுந்தர்ராஜன் இயக்கட்டும் என்று வாக்கு கொடுத்துவிட்டார்.
இந்த கதையில் நடித்த ரஜினிகாந்த் சில நாட்கள் ஷூட்டிங் முடிந்த பிறகு படத்தின் கதையில் எனக்கு நம்பிக்கை இல்லை எனவும் படத்தில் இருந்து விலகி விடலாம் என நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் அண்ணன் இளையராஜாவோ ரஜினியிட அப்படியெல்லாம் சொல்லாதீங்க இந்த கதை கண்டிப்பாக வெற்றி பெறும் நீங்கள் தைரியமாக நடியுங்கள். இந்த படம் வெற்றி பெறவில்லை என்றால் நான் ஹார்மோனியத்தை தொடுவதை விட்டுவிடுகிறேன் என்று சொன்னார்.
அதேபோல் அண்ணன் சொன்ன மாதிரி ராஜாதி ராஜா படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது என்று கங்கை அமரன் கூறியுள்ளார்.