சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் ஏற்கனவே சமீபத்தில் வெளியான ‘தர்பார்’ படத்தின் வெற்றியை கொண்டாடி வரும் நிலையில் இன்று திடீரென கடந்த 1991ஆம் ஆண்டு வெளியான ’தளபதி’ படத்தையும் கொண்டாடி வருகின்றனர்
இன்று தமிழகம் முழுவதும் தமிழர்களால் போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ’தளபதி’ படத்தில் போகிப்பண்டிகை அன்று தான் அந்த படத்தின் ஹீரோ ரஜினி கேரெக்டான சூர்யாவின் பிறந்த நாள் என்பதால் தளபதி போகி பண்டிகை என்ற ஹேஷ்டேக்கை டுவிட்டரில் பதிவு செய்து ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்
30 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஒரு படத்தை ஞாபகப்படுத்தி ரஜினி ரசிகர்கள் போகி பண்டிகையை கொண்டாடி வருவது இன்றைய தலைமுறைக்கு ஆச்சரியமான ஒன்றாகக் கருதப்படுகிறது