படத்தில் வாய்ப்பு கொடுக்க தயங்கிய ரஜினி.. தரமாக கலக்கிய தேனிசைத் தென்றல்!

By Velmurugan

Published:

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் தேனிசைத் தென்றல் தேவா. இவர் பல கானா பாடல்களை எழுதி தனது சொந்த குரலில் பாடியதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். 1989 ஆம் ஆண்டு வெளியான மனசுக்கேத்த மகராசா திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து அதே ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்திற்கு இசையமைத்ததால் சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றிருந்தார்.

இவர் ரஜினி, அஜித், விஜயகாந்த் என பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபலத்தின் உச்சியை அடைந்தார். ஆனால் இவரின் தொடக்க காலங்களில் இவருக்கு பல வாய்ப்புகள் முதலில் மறுக்கப்பட்டுள்ளது. அதன் பின் இவரின் திறமையை இவர் நிரூபித்த பின்னரே இவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்துள்ளது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைப்பதற்கு மிகவும் தயங்கியதாகவும் முதலில் மறுப்பு தெரிவித்து அதன் பின் பல விளக்கங்களை கொடுத்து தனது திறமையை நிரூபித்து காட்டினார் தேவா. இது குறித்த முழு தகவலையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா இசையமைத்து இருக்கக்கூடிய பெரும்பாலான படங்கள் இவருக்கு வெற்றியை தான் தேடி தந்துள்ளது. எந்த விதமான சினிமா பின்புலம் இல்லாமல் தன் திறமையை தானாக உணர்ந்து நடுத்தர குடும்பத்திலிருந்து இசை அமைப்பாளராக முன்னேறிய ஒரு சிறந்த கலைஞர். இவர் தன்னுடைய சொந்த முயற்சியினால் தான் சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்துள்ளார்.அது மட்டும் இல்லாமல் அவருடைய படங்கள் அனைத்தும் கிராமத்து பாணியில் இருக்கக்கூடியது.

இவருடைய பாடல்கள் எல்லாம் மக்களால் பெரிதும் ரசிக்கப் பட்டது. அது மட்டும் இல்லாமல் ஆசை, பாட்ஷா, நேருக்கு நேர் உள்ளிட்ட பாக்ஸ் ஆபிஸ் ஹிட் திரைப்படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறார். வாலி,குஷி, காதல் கோட்டை மாதிரியான படங்களில் இசையமைக்கும் போது இவருக்கு இசை அமைத்ததுக்கான ஃபிலிம் ஃபேர் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகுமாரின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல உதவிகள் செய்த சிவாஜி கணேசன்!

இப்படி தேனிசை தென்றல் தேவா அவர்களின் வெற்றியை பல பக்கங்கள் அடுக்கினாலும் இவரின் தொடக்க காலங்கள் மிகவும் கடுமையாக இருந்துள்ளது. அந்த வகையில் ரஜினியின் அண்ணாமலை திரைப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு முதலில் இசையமைப்பாளர் தேவாவிற்கு கிடைத்துள்ளது. ஆனால் அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரஜினிகாந்த் இசையமைப்பாளர் யார் என்று தயாரிப்பு நிறுவனத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு தேவா என்று அவர்கள் பதில் அளித்துள்ளனர்.

அதைக் கேட்டு அதிருப்தி அடைந்த ரஜினி ஏன் என் படத்திற்கு இளையராஜா இசையமைக்க வில்லையா.. என பல கேள்விகளை கேட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியால் தன் படத்திற்கு தேவா இசையமைப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மேலும் இசையமைப்பாளர் தேவா ஏன் என் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று நம்பிக்கை இல்லாமல் பல கேள்விகளையும் முன் வைத்துள்ளார்.

இதை நன்கு புரிந்து கொண்ட தயாரிப்பு நிறுவனம் உடனே அந்த படத்தில் ரஜினி அறிமுக பாடலை தேவா அவர்களை இசையமைக்க வைத்து உடனே வந்தேண்டா பால்காரன் பாடலை ரஜினி முன் போட்டு காட்டியுள்ளனர். அதை பார்த்த ரஜினி வியந்து போய் தேவா அவர்களை பாராட்டி உள்ளார். இப்படி பல தடைகளை மீறி தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பல வெற்றி திரைப்பட பாடல்களை கொடுத்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார் .