சில நாட்களுக்கு முன் தர்பார் படப்பிடிப்பை முடித்த ரஜினி மனதை ஆன்மிக வழியில் செலுத்துவதற்காக 6 நாட்கள் இமயமலைப்பயணம் சென்றார் ரிஷிகேஷ், கேதார்நாத் உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற ரஜினிகாந்த் தனது பயணத்தை முடித்து கொண்டு சென்னை விமான நிலையம் திரும்பினார்.
அப்போது ரசிகர் கூட்டம் அதிகமாக இருந்தது. அனைவரையும் சிரித்த முகத்துடன் சமாளித்த ரஜினி காரில் வீட்டுக்கு புறப்பட்டார்.
அப்போது காரில் சில ரசிகர்கள் தன்னை ஃபாலோ செய்து வருவதை அறிந்த ரஜினி வீட்டுக்கு சென்றதும் அவர்களை உள்ளே அழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது போல எல்லாம் செய்யக்கூடாது வாழ்க்கை ரொம்ப முக்கியம் என சொல்லி சிரித்த முகத்துடன் அவர்களுடன் புகைப்படம் எடுத்து அனுப்பி விட்டாராம்.
அவர் அப்படி நடந்து கொண்டபோது மணி 12.38ம் அந்த நேரத்திலும் எங்களுக்காக அன்பாக ரஜினி சார் நடந்து கொண்டதை மறக்க முடியாது என அந்த ரசிகர் தன் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.