இந்தியாவில் பிரமாண்ட இயக்குனர்களைக் கைவிட்டே எண்ணிவிடலாம், அவர்களில் முக்கிய பங்காற்றுபவர்களில் ஒருவர் இயக்குனர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவான பாகுபலி திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனை செய்தது.
அதன்பின்னர் பாகுபலி படத்தின் 2 ஆம் பாகத்தை அதைவிட பிரமாண்டமாக வேறு லெவலுக்கு இயக்கினார் ராஜமவுலி. பாகுபலி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் தாறு மாறு பண்ணிவிட்டது.
இந்தப் படத்தை அடிச்சிக்க வேற எந்தப் படமும் இல்லை என்பதுபோல் வசூலினையும் குவித்தது. தற்போது ராஜமவுலி ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் எனப் பல முன்னணி நடிகர்களைக் கொண்டு ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இரத்தம் ரணம் ரௌத்திரம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படமும் பாகுபலி படத்தினைப் போல் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாததால், இந்தப் படம் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தபடி 2021 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி ரிலீஸ் ஆகாது என்றும் அதனை ஜூலை 30 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இதன்மூலம் ரிலீஸ் 6 மாதங்கள் தள்ளிப் போகிறது.